பிக்பாஸில் இருந்து கமல் வெளியேற இதுதான் காரணம்... உண்மையை போட்டு உடைத்த வனிதா...!
தமிழில் கடந்த ஐந்து சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இதுதவிர தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் திடீரென ஷூட்டிங் மற்றும் அரசியல் பணிகள் காரணமாக நேரம் ஒதுக்க முடியாததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறி கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது கமலுக்கு பதில் இளம் நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வான்ட்டடாக வெளியேறிய நடிகை வனிதா, கமல் வெளியேறிய காரணம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "கடந்த இரண்டு வாரங்களாகவே எனக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருப்பது போல் தோன்றியது. கமல் சார் வந்து கேள்வி கேட்காமல் நீங்க பண்ணுவது தான் சரி என்று சொல்வது போல நடந்துகொண்டார்.
நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் வெளியேறுவதற்கு முன்பு பாலாஜியிடம் பேசும்போது அவன் அக்கா ஏதோ வேற மாதிரி நடக்கிறது என்று கூறினான். பின் கமல் சாரும் உடனே வெளியேறியது எல்லோருக்குமே ஷாக்காக இருந்தது. உண்மையை சொல்லப்போனால் இன்னும் மூன்று நான்கு வாரங்கள் தான் உள்ளது. அப்படி பார்த்தால் அவர் வெறும் 4 நாள் தான் ஷூட்டிங்கிற்காக ஒதுக்க போறாரு.
இத்தனைக்கும் அவர் நடிக்கிற படம் அவருடைய சொந்த தயாரிப்பில் எடுக்கிற படம் தான். இந்த நாலு நாள் அவரால் ஒதுக்க முடியாதா? அவருக்கே இந்த நிகழ்ச்சி தப்பா போகிறது என்று தெரிகிறது. அதனால் தான் அவர் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகிவிட்டார்.
எனக்கும் அதேபோல் தான் அந்த வீட்டில் ஏதோ தப்பா நடப்பது போல் தோன்றியது. அதுமட்டுமல்லாமல் நானும் அதிக மன அழுத்தத்தில் இருந்தேன். அதனால் தான் நான் வெளியே வந்துவிட்டேன். இந்த நிகழ்ச்சி கொண்டு செல்கிற விதமே சரியில்லை" என பல விஷயங்களை மிகவும் ஓப்பனாக பேசியுள்ளார் வனிதா.