நடிகை நயன்தாராவுக்கு குழந்தை பிறந்துதான் இப்போது ஹாட் டாப்பிக்காக சமூகவலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் ஜூன் மாதம் திருமணம் செய்து, கர்ப்பமாக இருக்கிறார் என்கிற செய்தி கூட வெளியாகாத நிலையில், நயனும், விக்கியும் திடீரென எப்படி இருவரும் இரட்டை ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அதன் பின்னரே அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது தெரிய வந்தது.
திருமணம் செய்த தம்பதிக்கு, 5 ஆண்டுகள் குழந்தை இல்லை என்றால்தான் சட்டப்படி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடியும், தம்பதிகளில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்க வேண்டும் என பல விதிமுறைகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. எனவே, நயனும், விக்கியும் சட்டத்தை மீறி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது இதுபற்றி விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணி, இதுபற்றி விசாரணை நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், சிலரோ அது அவர்களின் சொந்த விவகாரம், தேவையில்லாமல் ஊடகங்கள் இதை ஊதி பெரிதாக்குகிறது எனவும், சட்டம் என்றால் அது அனைவருக்கும் ஒன்றுதான் என சிலரும் கருத்து தெரித்து வருகின்றனர்.
இந்நிலையில், எப்போதும் சர்ச்சையான விஷயங்களில் சிக்கும் வனிதா விஜயகுமார் இதுபற்றி தெரிவித்துள்ள கருத்தில் ‘எந்த தவறையும் செய்யாத அழகான இரண்டு குழந்தைகளுக்கு அழகான வாழ்க்கையை ஒரு பெற்றோர் கொடுப்பதை விட அழகான விஷயம் என்ன இருக்கிறது?..அவர்களின் இனிமையான தருணத்தை அழிக்க துடிப்பதே தண்டனைக்குறிய குற்றம்தான். எனக்கு சட்டம் தெரியும், மருத்துவம் தெரியும் என சில கோமாளிகள் பேட்டி கொடுத்து வருகிறார்கள்.
திருந்தவேமாட்டாங்க. யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார். முட்டாளாகிய நீங்கள் எல்லாம் இதிலிருந்து தப்பித்துவிடுவீர்கள் என நினைக்கிறீர்களா?.. பொறுத்திருந்து பாருங்கள்.
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் என் வாழ்த்துக்கள். மற்றவர்கள் சொல்வதையெல்லாம் நீங்கள் அலட்சியப்படுத்திவிடுங்கள். குழந்தை பெறுவது மகிழ்ச்சியான விஷயம். அதை நீங்கள் செய்துவிட்டீர்கள். உங்களுக்கு கிடைக்கும் அன்பை அனுபவியுங்கள்..உங்கள் குழந்தைகளுக்கு அன்பை கொடுங்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்’ என தெரிவித்துள்ளார்.
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…