அருண் விஜயை நேரில் சந்தித்தேன்... எங்க அப்பாவிடம் போனில் பேசினேன்... சீக்ரெட் பகிர்ந்த வனிதா விஜயகுமார்...
விஜயக்குமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகளான வனிதா விஜயகுமாருடன் அவர் குடும்பத்தினர் பேசிய சில தருணங்களை அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக இருப்பவர் விஜயகுமார். 1970களில் இருந்து சினிமாவில் இருக்கும் இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முத்துக்கண்ணுவிற்கு அனிதா, கவிதா மற்றும் அருண் விஜய் ஆகிய பிள்ளைகள் இருக்கிறார்கள். இரண்டாவது மனைவியான மஞ்சுளாவிற்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என மூன்று பெண்கள் இருக்கிறார்கள்.
இதில் மற்ற அனைவரும் ஒன்றாக இருப்பது போல போட்டோக்களும், வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். ஆனால் மஞ்சுளாவின் முதல் பெண்ணும், நடிகையுமான வனிதாவுடன் யாரும் பேசுவது இல்லை. இதுகுறித்த சர்ச்சை பல வருடமாக சென்று கொண்டிருக்கிறது.
வனிதா தனது முதல் கணவர் ஆகாஷை விவகாரத்து செய்ததில் இருந்து இந்த சர்ச்சை தொடங்கியது எனக் கூறலாம். மகன் ஸ்ரீஹரிக்காக தந்தை விஜயகாருடன் அவர் விமான நிலையத்தில் போட்ட சண்டையெல்லாம் வீடியோவாக இன்னும் சமூக வலைத்தளங்களில் உள்ளது.
அதை தொடர்ந்து, அவர் இரண்டாவது கணவரையும் விவகாரத்து செய்தார். இதனால் பிரச்னை பெரிதானது. சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் வனிதா. இதை தொடர்ந்து வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கும் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. தொடர்ந்து சண்டை சக்கரவுகளில் ட்ரெண்ட் ஆனார். தற்போது வனிதாவிற்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்நிலையில், ஷகீலாவின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட வனிதா தன் சகோதரர் அருண் விஜயை நேரில் சந்தித்ததையும், தந்தை விஜயகுமாரிடன் பேசியதையும் கூறியிருக்கிறார். அதில், ஒருநாள் எனக்கு அப்பா நியாபகம் வந்தது. என் எண்ணில் இருந்து அவருக்கு கூப்பிட்டேன். அவர் வணக்கம் விஜயகுமார் என்றார். நான் வணக்கம் வனிதா விஜயகுமார் என்றேன். சொல்லுமா எனக் கேட்டார். எப்படிப்பா இருக்கீங்க? உங்களை பார்க்கணும் எனக் கேட்டேன்.
இப்போ உடம்பு முடியலமா. நான் சரியானதும் சொல்கிறேன் எனக் கூறி வைத்து விட்டார். நான் மீண்டும் கூப்பிட்டேன் அவர் எடுக்கவில்லை. இதைப்போல ஒரு பார்ட்டியில் அருண் விஜய் அண்ணனை சந்தித்தேன். திடீரென அவர் முன்னர் போய் நின்னேன். அவரே திகைத்து விட்டார். அண்ணா எப்படி இருக்கீங்க எனக் கேட்டேன். அவரும் நல்லா இருக்கேன் வனிதா. இது பொது இடம். இப்போ வேணாம். நீ உன் நண்பர்களுடன் தானா வந்திருக்க. போய் என்சாய் பண்ணு இப்போ வேண்டாம் என அனுப்பி வைத்தார்.
என் வீட்டினர் எல்லாரும் இன்னும் ஒழுங்காக தான் இருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்தவர்கள் தான் பிரச்னைக்கு காரணம் என வனிதா கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.