வன்மமா ? ஹா.. ஹா.. எனக்கா ! vj பார்வதி வெளியிட்ட புதிய வீடியோ .. இர்பானுக்கு மீண்டும் சவுக்கடி

by Giri |   ( Updated:2025-04-02 22:04:10  )
வன்மமா ? ஹா.. ஹா.. எனக்கா ! vj பார்வதி வெளியிட்ட புதிய வீடியோ .. இர்பானுக்கு மீண்டும் சவுக்கடி
X

தமிழ்நாட்டில் சர்ச்சைக்கு பெயர் போனவர் youtuber இர்பான். இவர் 'irfan views ' எனும் youtube சேனலை நடத்தி வருகிறார். இவர் தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். தானம் செய்யும்போது சர்ச்சையாக அவர் பேசும் வீடியோ வைரலான நிலையில் விஜே பார்வதி அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தானம் வழங்குகிறேன் என்று கூறி இர்ப்பானும் அவரது மனைவியும் காரில் சென்றனர். தெருவோரத்தில் வசிக்கக்கூடிய மக்களை காருக்கு அருகே அழைத்து வேட்டி, சேலை மற்றும் இன்னபிற பொருட்களையும் கொடுத்தனர்.. இவரின் மனைவி பொருட்களைக் கொடுக்கும் போது தவறுதலாக வாங்குபவரின் கை பட்டு விட்டது. உடனே இர்ஃபான் என் மனைவியை கையை பிடித்து இழுக்கிறார் என தவறாக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் கொந்தளித்த நிலையில் விஜே பார்வதி காட்டமாக விமர்சனம் செய்தார்.

அவர் கூறியதாவது; இவர் பெரிய ஜமீன்தாரு காருக்குள்ள உட்கார்ந்து கொண்டுதான் பொருளை கொடுப்பாரு இந்த புது பணக்காரன் தொல்லை தாங்க முடியல. இவங்க அடிக்கிற தம்பட்டம் இருக்கே அப்பப்பா தாங்க முடியல. இவன் புத்தி என்னன்னு இப்பதான் தெரிய வருது. இவ்ளோ கீழ்த்தரமா இருப்பான்னு எதிர்பார்க்கல நாம என்ன பண்ணுவோம், இந்த மாதிரி ஆள தான் ப்ரொமோட் பண்ணி பெரிய ஆளாக்கி விடுவோம் நாடு நாசமா போகட்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து தான் செய்த தவறுக்கு இர்பான் மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த நிலையில், இர்பான் மீது இருக்கும் வன்மத்தில் vj பார்வதி இப்படி பேசுகிறார் என சிலர் கருத்து கூறினர். இதற்க்கு பதில் அளிக்கும் விதமாக vj பார்வதி தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதலில் மற்றவருக்கு செய்யும் உதவியை ஏன் வீடியோ எடுத்து வெளியிட வேண்டும். பிரபலங்களை நேர்காணல் நடத்தும் போது குறைந்த பட்ச preparation கூட செய்வதில்லை. மம்முகா என்று கூறுவதற்கு பதிலாக மாமுகா என்று கூறுவது, கார் விபத்து, துபாய்க்கு சென்று கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை வீடியோவில் அறிவித்தது. இதெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

எல்லாத்தையும் கன்டென்ட் -ஆ பார்த்தா இப்படித்தான் தோணும். ஒரு குறைந்தபட்ச மனிதாபிமானம், தொழில் தர்மம், சமூக அக்கறை இல்லாதபோது மீண்டும் இதுபோல் சர்ச்சையில் சிக்குவார். பிறகு மன்னிப்பு வீடியோ போடுவார். இதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார். முன்னதாக எம்புரான் பட புரமோஷனுக்காக மோகன்லால் வந்த போது அவரிடம் நீங்கள் நிஜமாகவே வில்லனாக இருந்தால் குண்டு வைப்பீர்களா என்று கேட்ட கேள்வி பலரையும் முகம் சுளிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது .

Next Story