விஷால் வந்தா கொன்றுவேன்...! மேடையில் பகிரங்கமாக கூறிய வரலட்சுமி சரத்குமார்..!

by Rohini |
vishal_main_cine
X

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னனி நடிகைகளில் சத்தமே இல்லாமல் தன் நடிப்புத் திறமையால் முன்னேறிக் கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழில் போடாபோடி படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார்.

vishal1_cine

எதையும் தைரியமாக பேசும் குணம் கொண்டவர். மேலும் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த போது திடீரென தனது டிராக்கை மாற்றிக் கொண்டு சண்டை கோழி படத்தில் தனது வில்லத்தனத்தை காட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின் விஜய் நடித்த சர்கார் படத்திலும் வில்லியாக நடித்து வரவேற்புகளை பெற்றார்.

vishal2_cine

தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இயக்குனராக வேண்டும் என்ற முயற்சியிலும் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய வரலட்சுமி சரத்குமாரிடம் kiss, kill, marry என வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு இதை எந்த நடிகர்களுக்கு பயன் படுத்துவீர்கள் என கேட்டனர்.

vihal3_cine

அதற்கு வரலட்சுமி kill விஷால் தான் என யோசிக்காமல் கூற மேடையில் இருந்த அனைவரும் கூச்சலிட்டனர். மேலும் kiss சிம்பு என பதிலளித்தார். marry யாராவது இருக்கலாம் என பதில் கூறினார்.

Next Story