மாட்டிக்கிட்டீங்களா...? இவருடன் நெருக்கம் காட்டும் வரலட்சுமியின் வைரல் புகைப்படம்..
பிரபல நட்சத்திர ஜோடியாக சரத்குமார் – ராதிகா தம்பதியின் மூத்த மகளான வரலக்ஷ்மி சரத்குமார் தமிழில் போடா போடி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.
தொடர்ந்து தாரைதப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , சர்க்கார், மாரி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார். ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதனிடையே சமூக நலன் சார்ந்த விஷயங்களில் அக்கறை செலுத்தி வரும் வரலக்ஷ்மி சரத்குமார் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் பிரபுதேவாவுடன் இருக்கும் புகைப்படத்தை பிரபுதேவாவின் பிறந்தநாளை நினைவு படுத்தும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸேர் செய்து பிரபுதேவாவிற்கு தனது வாழ்த்தையும் சேர்த்து தெரிவித்துள்ளார்.