Connect with us

அந்த டைரக்டர் நேரிடையாக வந்து ஹோட்டலுக்கு கூப்பிட்டான்!.. வரலட்சுமி சொன்ன ஒரே வார்த்தை..

varu

Cinema News

அந்த டைரக்டர் நேரிடையாக வந்து ஹோட்டலுக்கு கூப்பிட்டான்!.. வரலட்சுமி சொன்ன ஒரே வார்த்தை..

தமிழ் சினிமாவில் திரையுலக வாரிசுகள் அதிகம் உள்ள திரைத்துரையில் மிகவும் முக்கியமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இயல்பாகவே மிகவும் துணிச்சலான, தைரியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் வரலட்சுமி. ஆரம்பத்தில் தமிழில் படவாய்ப்புகள் வந்தாலும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து தெலுங்கு சினிமா உலகில் ஒரு முக்கியமான அந்தஸ்து உள்ள நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

varu1

varu1

ஹீரோயினாகத்தான் ஜொலிக்க முடியுமா? வில்லியாகவும் நடித்து மக்கள் மனதை வெல்ல முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் வரலட்சுமி. வில்லி கதாபாத்திரத்தில் சண்டக்கோழி, சர்கார் போன்ற படங்களில் நடித்து சூப்பர் வில்லி இவர் தான் என்ற அளவுக்கு பட்டையை கிளப்பியிருப்பார்.

சரத்குமாரின் ரத்தம் என்பதால் அவரின் தைரியமான குணமும் வரலட்சுமியை ஒட்டிக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில் தன்னை ஒரு டைரக்டர் அந்த விஷயத்திற்கு ஹோட்டலுக்கே கூப்பிட்டான் என்று வெளிப்படையாக ஒரு சேனலில் கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார் வரலட்சுமி.

varu2

varu2

வரலட்சுமி ‘சேவ் ஷக்தி’ என்ற பெயரில் ஒரு என்.ஜி.ஓ வை நிர்வகித்து வருகின்றாராம். ஆனால் அது ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணத்தை கூறும் போது பல திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். ஒரு தனியார் சேனலின் தலைவர் ஒரு ஷோ பண்றதுக்காக வரலட்சுமியை அணுகியிருக்கிறார்.

அதற்காக வரலட்சுமியின் வீட்டிற்கே சென்று அனைத்து விவரங்களையும் கூறிவிட்டு கிளம்பும் போது மற்ற விஷயங்கள் எல்லாம் எப்படி என்று கேட்டிருக்கிறாராம். அதற்கு வரலட்சுமி ‘ மற்ற விஷயம்னா என்ன கேட்கிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் ‘அந்த விஷயம் எல்லாம் ஹோட்டலுக்கு வருவீர்களா?’ என்று வெளிப்படையாகவே கேட்டாராம்.

varu3

varu3

இதைக் கேட்டதும் செருப்பால அடிக்கனும்னு தோணுச்சு , ஆனால் நான் அப்படி பண்ணல, ஏன்னா அவனுக்கு என்ன தைரியம் இருந்தா ஒரு சினிமா பின்னனி இருக்கிற என்கிட்டயே இப்படி கேட்கிறானே? அப்போ சாதாரண பெண்களிடம் என்னெல்லாம் கேட்க மாட்டான்? என்று நினைத்து நீங்கள் கிளம்புங்கள் என்று கூற,

இதையும் படிங்க : அன்னைக்கே சோலியை முடிச்சிருப்பேன்-வடிவேலுவால் வாய்ப்புகளை இழந்த காமெடி நடிகரின் உச்சக்கட்ட கோபம்… என்னவா இருக்கும்?

அதற்கு அந்த நபர் ‘சாரி நீங்கள் bad mood ல இருக்கீங்க போல’ என்று கூறிவிட்டு சென்று விட்டாராம். அதன் பின் அந்த ஷோவிற்கு செல்லவில்லையாம் வரலட்சுமி. அதனை மையப்படுத்தி தான் பெண்களுக்காக என்று அந்த என்.ஜி,ஓ வை ஆரம்பித்தேன் என்று கூறினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top