நான் அந்த கேரக்டர்லயும் நடிக்க தயார்..! இயக்குனர்களுக்கு பச்சை கொடி காட்டிய வரலட்சுமி சரத்குமார்...
சுப்ரீம் ஸ்டார் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் சமீபகாலமாக முக்கியமான கதைகளை தேர்ந்தெடுத்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான இரவின் நிழல் மற்றும் பொய்க்கால் குதிரை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
ஹீரோயினாக போடா போடி என்ற படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் வரலட்சுமி வில்லி கதாபாத்திரத்தில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சண்டைக்கோழி, சர்கார் போன்ற படங்கள் இவரின் வில்லத்தனத்துக்கு ஏற்ற படமாக அமைந்தது.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது நடிப்பு சம்பந்தமான விருப்பங்களையும் சில அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.
அதாவது எனக்கு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. ஆனால் அமைகிற கேரக்டர்லாம் யாரையாவது குத்தனும், அருவாள் எடுக்கனும் இப்படி மாதிரியான கதைகளே தேடி வருகின்றன. நானும் காமெடி நல்லா பண்ணுவேன். அதனால் இயக்குனர்கள் யாராவது இருந்தால் வாய்ப்பு கொடுங்கள் என்று விண்ணப்பம் கோரியுள்ளார்.