எங்கதான் இருக்கிங்க மேடம்..? கொஞ்ச நாள் ஆளயே காணோம்...!
வரலட்சுமி சரத்குமார் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் மூலமாக அறிமுகமானார். விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் சவுத் பிலிம்பேர் விருதுகளில் சிறந்த துணை நடிகைக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார்.
அவரது டேனி படத்திற்காக அவருக்கு மக்கள் செல்வி என்ற பெயர் வழங்கப்பட்டது. அவரது கன்னடத் திரைப்படமான மாணிக்யா படத்தில் நடிகர் சுதீப் உடன் நடித்தார், மேலும் அந்தத் திரைப்படம் அந்த ஆண்டின் அதிக லாபம் ஈட்டிய கன்னடப் படங்களில் ஒன்றாக மாறியது.
2014 ஆம் ஆண்டில், பாலாவின் தாரை தப்பட்டை படத்திற்காக கரகாட்டம் கற்றுக்கொண்டார். அதில் நடிக்க பத்து கிலோகிராம் தன்னுடைய எடையைக் குறைத்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தைரியமான பெண்ணாக தன் நடிப்பை வெளிப்படுத்துவார். சண்டக்கோழி 2 படத்திலும் வில்லியாக ஒரு முழு நடிகையாக தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இந்நிலையில் ஹோலிவுட் பக்கமே பார்க்கமுடியாத நம்ம ஹீரோயின் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை போட்டு ரசிகர்களை நிம்மதிபடுத்தியுள்ளார்.