“வாரிசு படம் தள்ளிப்போனதற்கு உண்மையான காரணம் இதுதான்”… ஓஹோ இதுதான் விஷயமா??
விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் வருகிற 11 ஆம் தேதி ஒரே நாளில் வெளியாகவுள்ளதால், இந்த வருட பொங்கல் பண்டிகை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையவுள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் “வாரிசு” மற்றும் “துணிவு” ஆகிய திரைப்படங்களுக்கான முன்பதிவு புயல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. சில திரையரங்குகளில் முதல் ஷோ டிக்கெட் விலை 1000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பல தகவல்கள் வெளிவருகின்றன. எனினும் ரசிகர்கள் 2000 ரூபாய்க்கு டிக்கெட் விற்றால்கூட வாங்க தயாராக இருக்கிறார்களாம். அந்த அளவுக்கு மிகவும் ஆவலோடு இத்திரைப்படங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு “வாரிசு” திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான “வாரசுடு” திரைப்படத்தை ஆந்திராவில் வெளியிட பல சிக்கல்கள் எழுந்தன. அதாவது தெலுங்கில் மகர சங்கராந்தி (பொங்கல் தினம்) அன்று பாலகிருஷ்ணாவின் “வீர சிம்ஹா ரெட்டி” சிரஞ்சீவியின் “வால்ட்டர் வீரய்யா” ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. பாலகிருஷ்ணாவும், சிரஞ்சீவியும் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்கள் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.
இவ்வாறு பண்டிகை தினத்தில் மற்ற மொழி நடிகர்களின் திரைப்படங்களை வெளியிடக்கூடாது என தெலுங்கு பிலிம் சேம்பர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் விஜய்யின் “வாரசுடு” திரைப்படத்திற்கு சிக்கல் எழுந்தது. இந்த நிலையில் தற்போது “வாரசுடு” திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி ஆந்திராவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல நாட்களுக்கு முன் வருகிற 12 ஆம் தேதி “வாரசுடு” திரைப்படத்தை வெளியிட அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில்தான் தற்போது 14 ஆம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது.
இது குறித்து பேசிய தில் ராஜு, தெலுங்கில் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி போன்ற டாப் நடிகர்களின் திரைப்படங்கள் 12 ஆம் தேதி வெளிவருவதால் அத்திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக வாரசுடு திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்துள்ளதாக கூறியிருந்தார். ஆனால் “வாரசுடு” திரைப்படம் தள்ளிப்போனதற்கான உண்மையான காரணம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: விஷாலை குப்பை மேட்டில் படுக்க வைத்த டெரர் இயக்குனர்… இவர் இப்படி பண்ணாம இருந்தாத்தான் அதிசயம்…
அதாவது “வாரசுடு” திரைப்படம் வெளியீட்டிற்கு முழுவதுமாக தயாராகவில்லையாம். ஆதலால்தான் “வாரசுடு” திரைப்படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளிவைத்துள்ளார்களாம். ஆனால் தில் ராஜூ, இந்த விஷயத்தை மிக நேக்காக சமாளித்திருக்கிறார் என தெரியவருகிறது.