Cinema History
தமிழ் சினிமாவில் கூசும்ப்ஸ் கொடுத்த வேறலெவல் பாடல்கள்!.. இதுவரை கேட்காதவங்க இப்ப கேளுங்க!…
தமிழ்ப்பட உலகில் இளம் தலைமுறையினர் ஒருவருக்கொருவர் புதுமையைக் கொண்டு வர போட்டிப் போட்டுக்கொண்டு உழைத்து வருகிறார்கள். அந்த வகையில் பாடல்களை எடுப்பதிலும் புதுமையைச் செய்திருக்கிறார்கள். என்னென்ன என்று பார்ப்போமா…
சித்தரம் பேசுதடி
2006ல் சுந்தர்.சி. பாபு இயக்கத்தில் வெளியான படம். இந்தப் படத்தில் வந்த வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் அப்போது டிரெண்டிங் ஆனது. பாடலைப் பாடியவர் கானா உலகநாதன். எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் சலிக்காத பாடல் இது. இந்த ஒரு பாடலுக்காகவே படத்தைப் பார்த்தவர்கள் பலர் உண்டு.
அலைபாயுதே
2000ல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த பாடல். மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி இணைந்து நடித்த படம். இந்தப் படத்தில் வரும் அலையே சிற்றலையே பாடல் செம மாஸ் ரகம். பச்சை நிறமே பச்சை நிறமே என்றால் அங்கு காட்டப்படும் காட்சிகள் எல்லாம் பச்சை மயமாகவே இருக்கும். பார்க்க கண்கொள்ளாக் காட்சியைத் தந்த பாடல் இது.
தூள்
2003ல் விக்ரமின் அதிரடி நடிப்பில் வெளியான படம். இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியை பேக் ரவுண்டில் பரவை முனியம்மா பாட விக்ரம் வில்லன்களை அடித்துத் துவம்சம் செய்வார். அது தான் ஏ… சிங்கம் போல நடந்து வர்ரான் செல்லப் பேரான்டி பாடல். மதுரை வீரன் தானே என பாடல் ஆரம்பிக்கும். செம மாஸ் ஹிட் ஆனது.
நம்மவர்
1994ல் கமல் நடிப்பில் வெளியான படம். இதில் ஒரு வித்தியாசமான பாடல் வரும். இப்பொழுது நீங்கள் கேட்கப் போகும் பாடலில் வரும் இசை, தாளம், தாரை தப்பட்டை போன்ற பக்கவாத்தியங்கள் எல்லாமே கலப்படம் இல்லாத சுத்தமான மனித குரலில் செய்யப்பட்டவை என கமல் சொல்ல பாடல் வரும். கேட்பதற்கே புதுமையாக இருக்கும். எதிலேயும் வல்லவன்டா என பாடல் ஆரம்பிக்கும். மகேஷ் மகாதேவன் இசையில் எஸ்.பி.பி., ஸ்வர்ணலதா பாடியிருப்பர்.