துணிவு படத்தின் செகன்ட் ஆஃப் சும்மா தெறிக்கும்!... கொஞ்சம் மிஸ் ஆனாலும் வாரிசு காலி! என்னப்பா சொல்றீங்க?..

by Arun Prasad |   ( Updated:2023-01-04 10:44:52  )
Varisu VS Thunivu
X

Varisu VS Thunivu

விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு மோதவுள்ளன. இதில் “துணிவு” திரைப்படம் 11 ஆம் தேதியும், “வாரிசு” திரைப்படம் 12 ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.

கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து அஜித்-விஜய் திரைப்படங்கள் மோதவுள்ளதால் ரசிகர்களிடையே கடும் விவாதம் எழுந்து வருகிறது. பொங்கல் ரேஸில் “வாரிசு” ஜெயிக்குமா? “துணிவு” ஜெயிக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Varisu VS Thunivu

Varisu VS Thunivu

“துணிவு” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சமீபத்தில் வெளியானது. டிரைலர் மிகவும் வெறித்தனமாக இருந்ததால் அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தோடு இத்திரைப்படத்திற்காக காத்திருக்கின்றனர். எனினும் “வாரிசு” திரைப்படத்தின் டிரைலர் அவ்வளவாக ரசிகர்களை கவரவில்லை. ஆதலால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Thunivu

Thunivu

இந்த நிலையில் “வாரிசு” திரைப்படம் குறித்தும் “துணிவு” திரைப்படம் குறித்தும் ஒரு சுவாரஸ்யத் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது “துணிவு” திரைப்படத்தின் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க பயங்கரமான ஆக்சன் காட்சிகளால் நிறைந்திருக்கிறதாம். எனினும் இரண்டாம் பாதியை விட முதல் பாதி அருமையாக இருப்பதாக கூறுகிறார்களாம்.

Varisu

Varisu

அதே போல் “வாரிசு” திரைப்படம் ஒரு பிரமாதமான குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ளதாம். ரசிகர்களுக்கு மிகவும் கிரிஞ்சாக போய்விட்டால் படம் தப்பிப்பது கஷ்டமாம். இத்தகவலை வலைப்பேச்சு அந்தணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Next Story