“சீரியல்ன்னா உங்களுக்கு எளக்காரமா தெரியுதா?”… நிருபரிடம் கொந்தளித்த வாரிசு பட இயக்குனர்… என்னவா இருக்கும்??

Varisu
கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய்யின் “வாரிசு” திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ஃபேமிலி ஆடியன்ஸ்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருக்கிறது. ஆதலால் “வாரிசு” திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி திரைப்படமாக அமைந்திருக்கிறது.

Varisu
எனினும் “வாரிசு” திரைப்படத்தில் இடம்பெற்ற குடும்ப சென்டிமென்ட் காட்சிகளால் இத்திரைப்படம் டிவி சீரீயல்போல் இருப்பதாக இணையத்தில் பல கேலியான விமர்சனங்கள் எழுந்து வந்தன.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட “வாரிசு” படத்தின் இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி, இது குறித்து மிகவும் கொந்தளித்துப் பேசியுள்ளார்.
“டிவி சீரீயல்களை ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். இங்கே எத்தனை பேர் டிவி சீரீயல்களை விரும்பி பார்க்கிறார்கள் தெரியுமா? உங்களது வீட்டில் சென்று பாருங்கள். உங்களது பாட்டி, மாமா என பலரும் டிவி சீரீயல்களை மிக விரும்பி பார்ப்பார்கள்.
இதையும் படிங்க: “எம்.ஜி.ஆர்தான் இதில் நடிக்கனும்”… இயக்குனருக்கு ஆர்டர் போட்ட கலைஞர்… அப்படி என்ன நடந்துருக்கும்??

Vamshi Paidipally
டிவி சீரீயல்களால் அவர்களது வாழ்க்கை மிகவும் வசீகரமாக சென்றுகொண்டிருக்கிறது. எதற்கு அதனை குறைத்து மதிப்பிடுகிறீர்கள். எதையும் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். டிவி சீரீயலும் ஒரு கிரியேட்டிவ்வான விஷயம்தான்.
நீங்கள் டிவி சீரியல் பார்ப்பவர்களை உங்களுக்கு கீழானவர்களாக பார்க்கிறீர்கள் என்றால் உங்களை நீங்களே கீழானவர்களாக ஆக்கிக்கொள்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்” என அப்பேட்டியில் மிகவும் கோபத்துடன் பேசியிருக்கிறார் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி.