'வாரிசு' தயாரிப்பாளருக்கு இத்தனை கோடி லாபமா?...பிஸ்னஸ் ரிப்போர்ட் இதோ!...
பீஸ்ட் திரைப்படத்திற்கு பின் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது. ஆந்திராவிலும் இப்படம் ஒரு தெலுங்கு படமாகவே வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் வியாபாரம் பற்றிய தகவல்கள் வெளியே தெரியவந்துள்ளது. வாரிசு திரைப்படம் ஏறக்குறைய ரூ.260 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமை ரூ.70 கோடிக்கும், கேரள உரிமை 6.5 கோடிக்கும், கர்நாடக உரிமை 8 கோடிக்கும், ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாட்டு உரிமை ரூ.35 கோடிக்கும் விலை பேசப்பட்டுள்ளது.
அதேபோல், இப்படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமை ரூ.34 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ.10 கோடிக்கும், அனைத்து மொழிக்கான டிஜிட்டல் உரிமை ரூ.75 கோடிக்கும், அனைத்து மொழி சேட்டிலைட் உரிமை ரூ.57 கோடிக்கும் விலை போயுள்ளது. டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனமும், சேட்டிலைட் உரிமையை சன் டிவியும் வாங்கியுள்ளது. எனவே, படத்தின் வியாபாரம் ஏறக்குறைய 300 கோடியை தொட்டுள்ளது.
இதையும் படிங்க: வில்லனும் நானே!..ஹீரோவும் நானே!.. ஹீரோக்கள் வெறித்தனமான வில்லத்தனம் காட்டிய திரைப்படங்கள்…
இதில், ஆந்திராவில் இப்படம் தயாரிப்பாளருக்கு ரூ.50 கோடி வசூலை கொடுக்கும் என கணிக்கப்படுகிறது. எனவே, போது பீஸ்ட் படத்தின் மொத்த வியாபாராம் ரூ.350 கோடியை தொடும் எனத்தெரிகிறது. படத்தின் பட்ஜெட் 260 கோடி என்பதை வைத்து பார்க்கும்போது, தயாரிப்பாளருக்கு இப்படம் ரூ.90 கோடி லாபத்தை கொடுக்கும் என கணிக்கப்படுகிறது.
ஆனாலும், இப்படம் வெளியாகி எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை வைத்து துல்லியமான வசூலை நாம் தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.