
Cinema News
இந்த காப்பியடிச்ச போஸ்டருக்கு பல லட்சம் சம்பளமாம்.! வாரிசு டீமை ஏமாற்றிய டிசைனர்ஸ்..?
நேற்று மாலை விஜயின் 66வது திரைப்படத்தின் தலைப்பு வெளியானது. அதோடு முதல் போஸ்டர் வெளியிட பட்டது. இன்று விஜயின் 48வது பிறந்தநாள் என்பதால் அந்த புகைப்படத்தை நேற்று படக்குழு வெளியிட்டது.
அந்த புகைப்படம் வெளியிட்டதும் பலரும் ஆர்வமாய் அதனை பகிர்ந்து வந்தனர். அதோடு வழக்கம் போல இந்த போஸ்டர் எங்கிருந்து இன்ஸ்பிரேசன் எனும் பெயரில் எடுக்கப்பட்டது என பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
இதையும் படியுங்களேன் – இந்த விஷயம் விஜய்க்கு சுத்தமா பிடிக்காதாம்.! ஆனால், ரசிகர்கள் இதனை செய்யாம இருக்க மாட்டாங்களே…
அப்போது ஒரு சிலர் இந்த புகைப்படத்தில் விஜயின் பின்னணி புகைப்படம் இருப்பது கூகுள் போட்டோஸில் உள்ளது. மேலும் கபாலி படத்தின் பின்னணி போல இது இருக்கிறது என்று குறிப்பிட ஆரம்பித்து விட்டனர்.
தற்போது இந்த போஸ்டர்களை உருவாக்கும் டிசைனர்ஸ் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. அதன் படி இந்த படத்திற்கு 14 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளனர். இதனை அறிந்த நெட்டிசன்கள் ஷாக் ஆகிவிட்டனர். இப்படி புதுசாக டிசைன் செய்யாமல் கூகுள் போட்டவை எடிட் செய்து வைத்துள்ளார்களே என்று புலம்பி வருகின்றனர்.