தள்ளிப்போகிறது வாரிசு… பொங்கலுக்கு பட்டறையை போடும் அஜித்… டிவிஸ்டுக்கு மேல் டிவிஸ்ட்…
விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் விஜய்யின் 66 ஆவது திரைப்படமாகும். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகிபாபு போன்றோர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட பாடல் காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகியது. இதனால் ரசிகர்கள் பெரும் கோபத்தில் மூழ்கினர். மேலும் இத்தகவலை கேள்விப்பட்ட விஜய், படப்பிடிப்பில் பணியாற்றும் ஊழியர்களை வறுத்து எடுத்துவிட்டார் என்ற தகவல் கூட வெளிவந்திருந்தது.
“வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே “வாரிசு” திரைப்படத்தின் இயக்குனரான வம்சி பைடிப்பள்ளிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், ஆதலால் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவில்லை எனவும் செய்திகள் வந்தன. சில நாட்களிலேயே இயக்குனர் உடல்நலம் தேறி வந்துவிட்டார் என்றாலும், விஜய்யிடம் 40 நாட்கள் கூடுதலாக கால்ஷீட் தேதிகள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது “வாரிசு” திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. எனினும் இடைப்பட்ட காலத்தில் சில நாட்கள் படப்பிடிப்பு நின்றுபோனதால், இன்னும் பல காட்சிகள் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆதலால் அடுத்த மாதம் வரை “வாரிசு” படப்பிடிப்பு தொடரும் எனவும் ஒரு தகவல் வெளிவருகிறது. இதனால் “வாரிசு” திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, தற்போது அஜித்குமார் நடித்து வரும் “துணிவு” திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்துவிட்டதனால் இத்திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளதாம். சில நாட்களாகவே “வாரிசு”, “துணிவு” ஆகிய திரைப்படங்கள் பொங்கலுக்கு மோதவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது “வாரிசு” திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால், “துணிவு” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வருவது குறிப்பிடத்தக்கது.