நயன்தாராவை ஃபாலோ செய்தால் வாரிசு படம் தப்பிக்கும்.. தளபதி விஜய்க்கு ஓர் சூப்பர் ஐடியா இதோ...
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் எந்தளவுக்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதோ, அதே அளவுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், விடீயோக்கள் வெளியில் வந்துகொண்டே இருக்கின்றன. போகிற போக்கை பார்த்தால்,
இதையும் படியுங்களேன் - செல்லக்குட்டி தமன்னாவ நம்ப வைத்து ஏமாத்திடீங்களே.?! ஜெயிலர் படத்தில் நடந்த அந்த சம்பவம் இதோ...
பட ரிலீசுக்கு முன்பே, லீக்கான வீடியோ, போட்டோவை கோர்த்துப்பார்த்தாலே படத்தை பாதி பார்த்துவிடலாம் என்கின்றனர் நெட்டிசன்கள். அதே போல இதனை தடுக்கவும் ஒரு சூப்பர் ஐடியாவை கூறுகின்றனர்.
இதையும் படியுங்களேன் - தமிழில் ஒரு இங்கிலிஷ் படம்... சியான் விக்ரமின் தரமான சம்பவம் விரைவில்... மிரட்டும் கோப்ரா ட்ரைலர் வீடியோ...
அண்மையில், நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. அந்த திருமண ஒளிபரப்பு உரிமம் OTT நிறுவனத்திற்கு விற்கப்பட்டதால், அங்கு வந்த அனைவருக்கும் (விவிஐபிக்கள் தவிர) செல்போன் தடைவிதிக்கப்பட்டது. வாசலில் செல்போன் வாங்கி வைக்கப்பட்டு திருமணம் முடிந்த பின்னர் தான் கொடுக்கப்பட்டதாம்.
இயக்குனர் ஷங்கரும் அதே பாணியை தான் பின்தொடர்ந்து வருகிறாராம். அதே ஐடியாவை பின்பற்றினால் மட்டுமே, வாரிசு படத்தின் மீதி காட்சிகள் தப்பிக்கும் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.