விஜய் நடிப்பில் உருவான “வாரிசு” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இன்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மிக உற்சாகத்துடன் இத்திரைப்படத்தை கண்டுகழித்து வருகின்றனர். இன்று காலை 4 மணிக்கு இத்திரைப்படத்தின் முதல் ஷோ திரையிடப்பட்டது.
“வாரிசு” திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், படத்தில் விஜய் ஸ்டைலாக வலம் வருகிறார் என கூறினாலும், இது முழுக்க முழுக்க பேமிலி ஆடியன்ஸுக்கான திரைப்படம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இத்திரைப்படத்தில் வழக்கமாக விஜய்க்கு ஏற்ற எந்த மாஸான காட்சிகளும் இல்லை எனவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். இவ்வாறு ஒருவகையான கலவையான விமர்சனங்களே இத்திரைப்படத்திற்கு வருகின்றன.
இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், “வாரிசு” திரைப்படத்தை தனது வீடியோவில் மிக மோசமாக விமர்சித்து இருக்கிறார்.
“வாரிசு படத்தின் மிகப்பெரிய பிரச்சனையே இந்த படம் குடும்பக் கதையா? அல்லது ஹீரோவும் வில்லனும் மோதிக்கொள்கிற ஒரு மசாலா கதையா? என்ற குழப்பம், படம் பார்த்த நம்மை விட இந்த படத்தை எடுத்த அவர்களுக்கே அதிகமாக இருக்கிறது என்பதுதான்.
ஏனென்றால் குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் வருகிறது என்று காட்டினால், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ‘அய்யோ, இந்த குடும்பத்துக்கு இவ்வளவு பிரச்சனை வருதே’ என்று நம்மை உணர வைக்கவேண்டும். ஆனால் எமோஷனலாக நமக்கு கனெக்ட் ஆகவே இல்லை.
அதே போல் படத்தில் மொக்கையான வில்லனை வைத்துக்கொண்டு, இவரிடம் ஹீரோ சண்டை போட்டால் என்ன, போடாமல் இருந்தால் என்ன என்பது போல் தோன்ற வைத்துவிடுகிறது.
பேமிலி ஆடியன்ஸுக்கு படம் எடுத்து வைத்திருப்பார்கள் என்று பார்த்தால், Chartered Accountantக்கு கூட புரியாத மாதிரி படம் எடுத்து வைத்திருக்கிறார்கள். படத்தில் ‘உன்னிடம் உள்ள ஷேர்களை அடித்து எழுதி வாங்குகிறேன் பார்’ என்று ஒரு வசனம் வருகிறது. இந்த காலத்தில் வந்து ஷேர்களை அடித்து எழுதி வாங்குவது மாதிரி படம் எடுத்தால் இந்தியா எப்படி வல்லரசாகும்?” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: அஜித்தான் வங்கியை கொள்ளையடிக்கிறார்ன்னு நீங்க நினைக்கலாம்… ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்… “துணிவு” விமர்சனம் இதோ…
மேலும் பேசிய அவர் “வாரிசு படத்தில் எந்த ஒரு கதாப்பாத்திரத்தையும் ஒழுங்காக வடிவமைக்கவில்லை. ஆட்டுக்கு எதுக்கு தாடி, நாட்டுக்கு எதுக்கு கவர்னர் என்பது போல் இந்த படத்தில் எதுக்கு ஹீரோயின் என்றே தெரியவில்லை. ஹீரோ வில்லனுக்கு அறிவுரை சொல்கிறார். அதை கேட்டதும் வில்லன் பிரகாஷ் ராஜ் திருந்தி விடுகிறார். அவரே நினைத்தால் கூட இனி வில்லனாக நடிக்கவே முடியாது போல இருக்கிறது. அந்த அளவுக்கு நல்லவனாக ஆகிவிடுகிறார் பிரகாஷ் ராஜ். புத்தருக்கே போட்டியாக வந்துவிடுவார் போல.
இந்த படத்தின் டிரெயிலர் வெளியாகும்போது மெகா சீரியல் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் இது மெகா சீரீயல் இல்லை. ஹிந்தியில் இருந்து தமிழ் டப்பிங் கொண்டு வந்த சீரியல் போல் இருக்கிறது. அதில்தான் வீட்டு வேலை செய்யும் ஆயா கூட பியூட்டி பார்லரில் இருந்து வந்தது போல் இருப்பார். ஹிந்தி மெகா சீரீயலையே நல்லா விரும்பி பார்ப்பேன் என கூறுபவர்கள் இந்த படத்தை தாராளமாக சென்று பார்க்கலாம்” என்று “வாரிசு” திரைப்படத்தை குறித்து கேலி செய்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
Nayanthara: கேரளாவை…
Pushpa2 Review:…
Power Star: தமிழ்…
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…