துணிவு படத்தை வாங்கி வெளியிடும் வாரிசு படத்தின் தயாரிப்பாளர்… அடேங்கப்பா… இது நம்ம லிஸ்டலயே இல்லையே!!
விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் மோதவுள்ள செய்திதான் தற்போது “Talk of the Town” ஆக இருக்கிறது. “வாரிசு” வெற்றிபெறுமா? “துணிவு” வெற்றிபெறுமா? போன்ற விவாதங்கள் இணையத்தில் எழுந்து வருகின்றன.
இதனிடையே சமீபத்தில் “வாரிசு” திரைப்படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூ, “தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் ஒன். ஆதலால் வாரிசு படத்திற்குத்தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கவேண்டும்” என ஒரு பேட்டியில் கூறியதாக செய்திகள் பரவின. தில் ராஜூ இவ்வாறு கூறியதாக செய்திகள் பரவியதை தொடர்ந்து இணையத்தில் விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே “யார் நம்பர் ஒன்?” என்ற விவாதங்கள் எழுந்தன.
ஆனால், தான் அது போன்ற அர்த்தத்தில் கூறவில்லை எனவும், முழு பேட்டியில் 30 வினாடிகளை மட்டும் வெட்டி பரப்புகிறார்கள் எனவும் அறிக்கை விட்டார் தில் ராஜூ. இந்த நிலையில் தற்போது தில் ராஜூ குறித்து மிகவும் அதிர்ச்சிகரமான ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது “வாரிசு” திரைப்படத்தை தயாரித்த தில் ராஜூ, அஜித் நடித்த “துணிவு” திரைப்படத்தை ஆந்திராவில் சில பகுதிகளில் வெளியிட உள்ளாராம். தில் ராஜூ தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.
இதையும் படிங்க: தனுஷை வைத்து ஆராய்ச்சி செய்ய நினைத்த பார்த்திபன்… தப்பித்தால் போதும் என ஓட்டம் பிடித்த நடிகர்… இதெல்லாம் நடந்திருக்கா??
தெலுங்கில் பல திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார். குறிப்பாக ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து இயக்கி வரும் திரைப்படத்தை தில் ராஜூதான் தயாரித்து வருகிறார். இந்த நிலையில்தான் “துணிவு” திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பை ஆந்திராவில் தில் ராஜூ வெளியிட உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.