விஜய்யின் “வாரிசு” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நேற்று மாலை இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலரில் விஜய் மிகவும் மாஸாக தென்பட்டாலும், டிரைலர் உருவான விதம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.
குறிப்பாக டிரைலரில் விஜய் பேசும் வசனங்கள் பலவும் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, தனது பேட்டி ஒன்றில் “வாரிசு” திரைப்படத்தில் விஜய் பேசும் வசனங்களுக்கு பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்களை குறித்து பகிர்ந்துள்ளார்.
டிரைலரில் விஜய் தனது தாயாரிடம் தொலைப்பேசியில் பேசும்போது “எல்லா இடமும் நம்ம இடம்தான்” என ஒரு வசனத்தை கூறுவார். அதாவது “தமிழ்நாட்டை பொறுத்தவரை அஜித்தான் நம்பர் ஒன், ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் விஜய்தான் நம்பர் ஒன். குறிப்பாக லண்டன் போன்ற நாடுகளில் இப்போதே வாரிசு படத்தின் பிசினஸ் அமோகமாக இருக்கிறது. இதனை குறிப்பிட்டுத்தான் விஜய் அந்த வசனத்தை பேசுகிறார்” என செய்யாறு பாலு கூறியிருந்தார்.
இதையும் படிங்க: “பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா”… இந்த கிளாசிக் காமெடி எப்படி உருவாச்சி தெரியுமா?? கேட்டா அசந்திடுவீங்க..
மேலும் டிரைலரில் விஜய் “சீட்டோட ஹீட்டு அந்த சீட்டுல இல்லை. அதுல்உட்கார ஆளை பொருத்துதான் இருக்கு” என்று ஒரு வசனம் வரும். அந்த வசனம், விஜய்யின் அரசியல் நுழைவுக்கான வசனமாக வெளிப்படுகிறதாம். மேலும் “முதல்வர் சீட்டில் உட்காருவதற்கு ரெடியாகிவிட்டேன்” என விஜய் கூறுவதாக அந்த வசனத்தின் மூலம் தெரிய வருவதாகவும் அப்பேட்டியில் செய்யாறு பாலு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Samantha: தென்னிந்திய சினிமாவில்…
ராணுவத்தை மையமாக…
ஏ.ஆர்.ரகுமான் தனது…
புஷ்பா 2…
சிவகார்த்திகேயன் தனுஷ்…