நடிகராக இருந்து அரசியலுக்கு வந்துள்ள விஜய் அரசியலுக்கு வந்து கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகியும் இதுவரை நேரடியாக எந்த செய்தியாளருக்கும் பேட்டி கொடுத்ததில்லை.. அதேபோல் செய்தியாளர் சந்திப்பதையும் நடத்தியதில்லை. இந்நிலையில் என்டிடிவி நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்று விஜயை 45 நிமிடம் பேட்டி எடுத்திருக்கிறார்கள்..
அந்த பேட்டியில் விஜய் பல கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார்.. கரூர் சம்பவம் நான் எதிர்பாராத ஒன்று.. இப்போது வரை அது என்னை வேட்டையாடி வருகிறது.. என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்வதற்கு எனக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. அதனால்தான் அது பற்றிய உடனடியாக நான் ரியாக்ட் செய்யவில்லை.
நான் கிங் மேக்கராக இருக்க அரசியலுக்கு வரவில்லை.. கருத்து சொல்வதற்கு நான் வரவில்லை.. களத்தில் வெற்றி பெறவே வந்திருக்கிறேன்.. அரசியல்தான் என் எதிர்காலம்.. அதனால்தான் சினிமாவை விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.. நான் இடதுமல்ல.. வலதும் அல்ல.. மத்தியிலும் அல்ல.. என்னை பொறுத்தவரை மக்களின் பிரச்சனையை பேசுவதுதான் அரசியல் என நினைக்கிறேன்.. அதைத்தான் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.. கண்டிப்பாக அரசியலில் நீண்ட காலம் பயணிப்பேன்’ என்றெல்லாம் அதில் விஜய் பேசியிருக்கிறார்.

இந்நிலையில், விஜயை பேட்டி எடுத்த செய்தியாளர்களில் ஒருவரான வசுதா வேணுகோபால் தவெக தலைவர் விஜயை சந்தித்தேன்.. அவர் ஒரு X Factor.. நல்ல மனிதர்.. நிறைய தகவல்களை தெரிந்து வைத்திருக்கிறார்.. தைரியமாக இருக்கிறார்.. தயாராக இருக்கிறார்.. விளையாட்டு துவங்கிவ்ட்டது’ என பதிவிட்டிருக்கிறார்.. இதை விஜய் ரசிகர்கள் சமூகவலைகளில் பகிர்ந்து வருகிறார்கள்.



