இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா... கெட்ட வார்த்தை பேசி அதிர வைத்த ஆண்ட்ரியா!
சிபிராஜின் நடிப்பில் தற்போது உருவாகியிக்கும் திரைப்படம் வட்டம். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா, அதுல்யா ரவி, பால சரவணன், சைத்ரா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வருகிற ஜூலை 29ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தில் வழக்கம் போல ஆண்ட்ரியாவுக்கு அழுத்தமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: அந்த சம்பவத்துக்காக கதறி அழுதேன்… சூர்யா வாழ்வில் நடந்த சோக நிகழ்வு இதுதான்…
குறிப்பாக பெண்களால் சிபிராஜ் சந்திக்கும் பிரச்னையை மையமாக கொண்டு படமெடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் "இந்த பொண்ணுங்க எல்லாம் ஏன் இப்படி இருக்காங்க, உண்மையான காதலை விட பணம் ஏன் பெருசா தெரியணும்" எனும் வசனம் ஆண்ட்ரியாவை கோப்படுத்தி கெட்டவார்த்தை திட்ட தூண்டுகிறது. நல்ல வரவேற்பை பெற்றுள்ள அந்த ட்ரைலர் இதோ... https://www.youtube.com/watch?v=n-iNRwFclAw&t=110s