திரையுலகில் நடிகர் வடிவேலுவுக்கும் – விஜயகாந்துக்கும் இடையே எழுந்த மோதல் குறித்து எல்லோருக்கும் தெரியும். சின்னகவுண்டர் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க வேண்டாமென கவுண்டமணி கூறிவிட்டார். இதை வடிவேலு விஜயகாந்திடம் சொல்ல இயக்குனரை அழைத்து ‘இந்த படம் முழுவதும் எனக்கு குடை பிடிக்கும் வேடத்தை இவருக்கு கொடுங்கள்’ என சொல்லியதோடு, அவருக்கு நல்ல வேஷ்டி சட்டைகளையும் விஜயகாந்த் வாங்கி கொடுத்தார்.
ஆனால், சில காரணங்களால் விஜயகாந்த் மீது கோபம் கொண்ட வடிவேலு வேண்டுமெனவே விஜயகாந்த் வீட்டின் எதிரே வீடு வாங்கினார். ஒருநாள் காரை நிறுத்துவது தொடர்பாக விஜயகாந்த் ரசிகர்களுக்கும் அவருக்கும் இடையே எழுந்த வாக்குவாதம் சண்டையில் முடிந்து காவல் நிலையம் வரை சென்றது.
இதைத்தொடர்ந்து விஜயகாந்தை வடிவேல் படுமோசமாக விமர்சித்தார். அவரை திட்டுவதற்காகவே திமு கட்சிக்காக பிரச்சாரம் செய்ய சென்றார். சென்ற இடமெல்லாம் விஜயகாந்தை திட்டியும், நக்கலடித்தும் தனது வஞ்சத்தை தீர்த்துக்கொண்டார். ஆனால், வடிவேலு பற்றி விஜயகாந்த் எந்த இடத்திலும் பேசியதில்லை.
வடிவேல் நடந்து கொண்ட விதம் திரையுலகில் பலருக்கும் பிடிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வடிவேலு வாய்ப்புகளை இழந்தார். அதோடு, இம்சை அரசன் படத்தின் 2ம் பாகத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் அவருக்கு ரெட் கார்டும் விதிக்கப்பட்டு சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன்பின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால், அப்படம் ஓடவில்லை. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஒருபக்கம், வடிவேலுவை விமர்சித்து அவருடன் நடித்த போண்டா மணி உள்ளிட்ட சக காமெடி நடிகர்கள் தொடர்ந்து ஊடகங்களில் பேட்டி கொடுத்தனர்.
இந்நிலையில், வடிவேலுவின் நண்பரும், அவருடன் பல வருடங்களாக நெருக்கமாக பழகி வரும் VCK மாலின் என்பவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘எல்லோரும் சொல்வது போல் வடிவேலு இல்லை. அவர் மிகவும் நல்லவர். அவரது வீட்டில் வேலை செய்த பெண் 50 பவுன் நகையை திருடிவிட்டார். அதை கூட அவர் விட்டுவிட்டார். நான் இல்லாமல் சினிமா இல்லை என அடிக்கடி சொல்வார். அவரை பற்றி வரும் மீம்ஸ்களை பார்த்து ரசிப்பார்.
வடிவேலுவை பற்றி இப்போது தவறாக பேசுபவர்கள் யாரும் அவர் வாய்ப்பில்லாமல் வீட்டில் இருந்த போது அவரை வந்து பார்க்கவில்லை. ‘போய் தொலைந்தான்’ என்றுதான் நினைக்கிறார்கள். மாமன்னன் படத்திற்கு பின் வடிவேலுவை 10 வருடங்கள் அசைக்க முடியாது. விஜயகாந்த் மீது அவருக்கு ஒன்றும் பெரிய கோபம் கிடையாது. ‘நல்ல மனுஷன்தான். உடம்பு சரியில்லாம இருக்காரு.. வருத்தமா இருக்கு.. அவர் நல்லவர்தான்..அவரின் வீட்டில்தான் சிலர் சரியில்லை’ என என்னிடம் சொன்னார். அந்த அளவுக்கு நல்லவர் அவர். அவரை திட்டியவர்களை கூட அவர்கள் பாவம் என்றுதான் சொல்லியிருந்தார்’ என அவர் பேசினார்.
Lubber Pandhu: கடந்த…
Sun serials:…
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…
Vijay tv:…