விஜய் வசூல் வேற.. ஆசை படலாம்.. அதுக்கு இப்படியா? GBU கலெக்‌ஷன் இவ்வளவுதானா?

by Rohini |   ( Updated:2025-04-17 04:08:24  )
vijay_ajith
X

vijay_ajith

Good Bad ugly: பெரிய படங்கள் என்றாலே அதன் கதை எப்படி இருக்கிறது என்பதை விட அந்தப் படத்தின் கலெக்ஷன் எந்த அளவு வரும் என்பதை பற்றி தான் ஒரு விவாதமே நடந்து கொண்டிருக்கும். இதைப் பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவருடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். ஒரு படம் எப்படி கலெக்ட் பண்ணுகிறது என்பதை படம் ரிலீஸ் ஆகி இரண்டாவது வாரம் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும். இப்போதைக்கு எவ்வளவு வசூல் செய்து இருக்கிறது, எந்த அளவு ட்ரெண்டிங்கில் இருக்கிறது, அது மட்டும் தான் நம்மால் பேச முடியும். இப்போது ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்றால் ஒரு படம் எப்படி இருக்கிறது என்பதை தாண்டி எல்லோருமே கலெக்ஷனை பற்றி அறியக்கூடிய ஒரு மனநிலைமைக்கு வந்து விட்டார்கள்.

எந்த ரெக்கார்டை பீட் செய்திருக்கிறது, அந்த நடிகரை இவர் முந்திவிட்டாரா என்பது பற்றிய ஒரு விவாதம் தான் சோசியல் மீடியாக்களில் இப்போதைக்கு வந்து கொண்டிருக்கின்றது. இந்த கம்பேரிசனில் பாக்ஸ் ஆபிஸ் நம்பர் என்பது மிக முக்கியமாக போய்விட்டது. இதுதான் பிரச்சனை. தமிழ் சினிமா மட்டுமல்ல உலக அளவில் இருக்கக்கூடிய சினிமாக்களிலும் ரசிகர்களை பொறுத்த வரைக்கும் முதல் நாள் ரிவ்யூ என்ன, அதன் பிறகு அவர்கள் தெரிந்து கொள்ள ஆசைப்படுவது முதல் நாள் வசூல் என்ன என்பது பற்றி தான் .இதற்கெல்லாம் ஒரே காரணம் ஊடகங்கள் தான்.

ஒரு youtube சேனலில் உட்கார்ந்து கொண்டு கலெக்ஷனை பற்றி பேச பேச எல்லோருமே அதை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய அளவில் கலெக்சனை பெற்றிருக்கிறது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இந்த படத்தினுடைய ஹைப்பை வைத்து நான் சொன்னது கண்டிப்பாக படம் 100 கோடி வசூல் செய்யும் என்று நான் கூறினேன். அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி என்று தான் நான் குறிப்பிட்டிருந்தேன். ஏனெனில் ஐந்து நாட்கள் விடுமுறை நாட்கள் .அது மட்டுமல்லாமல் சோலோவாக ரிலீஸ் ஆன படம் .

இப்படி ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை ஆக இருந்ததினால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூல் செய்யும் என்று நான் கூறி இருந்தேன். இன்னொன்று 900 ஸ்கிரீன்களில் அந்த படம் ரிலீஸ் ஆனது. ஐந்து நாட்களில் 100 கோடி. இனி வரும் நாட்களில் வசூலை பார்த்து இனிமேல் தான் சொல்ல முடியும் .தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி, உலக அளவில் 175 கோடி. இன்னும் ஒரு வாரம் முடியும் நேரத்தில் கண்டிப்பாக இந்த படம் உலக அளவில் 200 கோடியைத் தாண்ட வாய்ப்பு இருக்கிறது .தமிழ்நாட்டில் 110 கோடி அளவில் தாண்டலாம்.

மொத்தமாக இதனுடைய வசூல் என்னவாக இருக்கும் என்பதை இன்னும் வரும் வாரங்களில் ஓடுவதை பார்த்து தான் சொல்ல முடியும் .ஆனால் 550 கோடி வசூல் பண்ணும் 400 கோடியை தாண்டும் இதெல்லாம் என்னால் இப்போது சொல்ல முடியாது. ஏனெனில் இரண்டாவது வாரம் முடியும் பொழுது தான் சொல்ல முடியும். இப்போதைக்கு எனக்கு தெரிந்த வரைக்கும் 250 லிருந்து 300 கோடி வரை கண்டிப்பாக இந்த படம் வசூல் பண்ணும் என்பதை என்னால் சொல்ல முடியும் என்று கூறினார். ஆனால் 2024 இல் கோட் படம் 455 கோடி வசூலை பெற்றது. அதனால் குட்பேட் அக்லி திரைப்படமும் அந்த வசூலை நெருங்கிவிடும் என்று கூறுகிறார்கள் அது உண்மையா என்று தனஞ்செயனிடம் கேட்டபோது அதற்கு அவர் சொன்ன பதில் இதோ.

கம்பேரிசனே பண்ணக்கூடாது. கோட் படத்தைப் பொறுத்த வரைக்கும் தமிழ்நாட்டில் 275 கோடி வசூலை பெற்றது. உலக அளவில் மிகப்பெரிய அளவில் கலெக்ஷனை செய்தது .இப்போ குட்பேட்அக்லி திரைப்படமும் ஓவர் சீசில் கோட் படத்தை போல வசூல் செய்தால்தான் கோட் படத்தை நெருங்க முடியும். நீங்கள் ஆசைப்படலாம். அது மாதிரி கலெக்ஷன் வரனும்ல. நாமெல்லாம் ஆசைப்படுவதில் தப்பே கிடையாது. இதை எப்படி நாம் பார்க்க வேண்டும் என்றால் அஜித் கரியரிலேயே இதுதான் அதிகமான கலெக்ஷனை தந்த படம் என்று பார்க்கும் பொழுது நமக்கு சந்தோசமாக இருக்கிறது .

இந்த திரைப்படம் 250 அல்லது 300 கோடி வசூல் செய்தால் அஜித் கரியரில் இதுதான் அதிகமான கலெக்ஷனை அள்ளிய படமாக இருக்கும். அடுத்த படத்திற்கு 450 கோடியைத் தாண்டும். ஏன் இப்படி அவசர அவசரமாக நாம் அப்படி கம்பேர் பண்ண வேண்டும். கம்பேர் பண்ணலாம். ஆனால் அஜித் சார் படங்களை மட்டும் தான் நாம் கம்பேர் செய்து பார்க்க வேண்டும். இவர பீட் பண்ணினார் அவர பிட் பண்ணார் என்பது தேவையில்லை என தனஞ்செயன் கூறினார்.

Next Story