இயக்குநர் பிரபதீஷ் சாம்ஸ் இயக்கத்தில் யோகி பாபு, வேதிகா, இனிகோ பிராபகர், சாந்தினி, மறைந்த நடிகர் பிரதாப் போத்தன், ஹரீஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கஜானா படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.
பிரதாப் போத்தன் எல்லாம் நடித்துள்ள நிலையில், இந்த படம் எப்போ எடுக்கப்பட்டது என்கிற கேள்வி தானாகவே ரசிகர்கள் மத்தியில் எழுந்து விடுகிறது.
இதையும் படிங்க: காதல் மன்னன் படத்தில் நாயகி என்னை கொடுமைப்படுத்தினார்… சரண் சொன்ன ஷாக்கிங் தகவல்
கஜானா எனும் டைட்டிலில் அமானுஷ்யம் நிறைந்த காட்டுக்குள் வரும் ஒரு டீம் அங்குள்ள அமானுஷ்யங்களால் சிக்கிக் கொள்கின்றனர். அங்கிருந்து எப்படி தப்பிக்கின்றனர் என்பது தான் இந்த படத்தின் கதை.
புலி, யானை, பாம்பு, கழுகு என கிராபிக்ஸில் பல விஷயங்களை முடிந்த வரை முயற்சி செய்துள்ளனர். ஆனால், எதுவுமே யதார்த்தமாக இல்லாமல் பிசிறடித்து வருவதை டிரெய்லரிலேயே இப்படி பார்க்க முடிகிறது என்றால் படம் வெளியானால் அந்த விஷயங்களே மைனஸ் ஆகி விட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதையும் படிங்க: 2024-ல் ஒரு ஹிட் கூட இல்லை!.. இது என்னடா தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!..
சிம்புவுக்கு ஜோடியாக காளை படத்தில் நடித்த வேதிகா, ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக முனி மற்றும் காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த நிலையில், இந்த படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளாரா? என ரசிகர்கள் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.
நடிக்க வந்த காலத்தில் இருந்தே ஒரே மாதிரியாக தனது உடம்பை எப்படி இத்தனை ஆண்டுகள் மெயின்டெயின் செய்து வருகிறார் வேதிகா என்றும் ரசிகர்கள் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.