வீர தீர சூரன் முதல் பாதி எப்படி இருக்கு?!.. டிவிட்டரில் ரசிகர்கள் சொல்வது என்ன?!…

#image_title
Veera dheera sooran review: அருண்குமார் இயக்கத்தில் சியான் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷரா விஜயன், மலையாள நடிகர் சுராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம்தான் வீர தீர சூரன். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஒரு பக்கா சஸ்பென்ஸ் கேங்ஸ்டர் ஆக்சன் படமாக வீர தீர சூரன் உருவாகியுள்ளது.
இந்த படத்திற்காக கடந்த சில நாட்களாகவே பக்கா புரமோஷனில் ஈடுபட்டிருந்தது படக்குழு. விக்ரம், துஷரா, எஸ்.ஜே.சூர்யா, படத்தின் இயக்குனர் அருண் ஆகியோர் கொண்ட குழு ஊர் ஊராக சென்று புரமோஷன் செய்தார்கள். அதுபோக ஊடகங்களிலும் வளைத்து வளைத்து பேட்டி கொடுத்தார்கள்.
அப்போது ஷூட்டிங்கில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை எல்லோருமே பகிர்ந்து கொண்டனர். மேலும், மதுரை, ஹைதராபாத், கேரளா என பல ஊர்களுக்கும் சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி புரமோஷன் செய்தனர். ஆனால், இன்று காலை வெளியாக வேண்டிய திரைப்படம் வெளியாகவில்லை.
இப்படத்தில் முதலீடு செய்திருந்த இரண்டு நிறுவனங்களிடம் ஓடிடி உரிமையை தயாரிப்பாளர் கொடுத்துவிட, ஓடிடி உரிமையை விற்பனை செய்யும் முன்பே படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள் என சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இன்று காலை படம் வெளியாகவில்லை. ஒருவழியாக விக்ரம் உள்ளிட்ட சிலர் தங்களின் சம்பள பணத்தை விட்டுக்கொடுத்து இன்று மாலை 5 மணிக்கு படம் வெளியானது. சில தியேட்டரில் 5.30க்கு வெளியானது.

இந்நிலையில், படத்தின் முதல் பாதியை பார்த்த ரசிகர்கள் டிவிட்டரில் கருத்து கூறி வருகிறார்கள். படம் மெதுவாக சென்றாலும் நன்றாக இருக்கிறது. சியான் விக்ரமின் கேரக்டர் கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை தரமாக இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா இதற்கு முன் நடித்த படங்களை ஒப்பிட்டால் இந்த படத்தில் அவருக்கு வித்தியாசமான வேடம். முதல் பாதியில் காட்சியில் குறைவாகவும், நீளமாகவும் இருந்தாலும் திரைக்கதை நச்சென அமைக்கப்பட்டிருக்கிறது.

இடைவேளை காட்சி வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பாதியில் அதிக சண்டைக் காட்சிகள் இல்லை. அனேகமாக சிறப்பான ஆக்சன் காட்சிகள் இரண்டாம் பாகத்தில் வரும் என எதிர்பார்க்கிறேன்’ என ஒருவர் பதிவிட்டுள்ளார். இன்னொருவர் ‘அடுத்து என்ன என்கிற கேள்வியோடே கதை நகர்கிறது. சியான் ஏற்றிருக்கும் காளி வேடம் அசத்தல். அருண்குமார் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்’ என பதிவிட்டுள்ளார்.