3 பேர் காசு கொடுத்தும் ரிலீஸ் ஆகலயே!.. வீர தீர சூரன் ரிலீஸாக இவ்வளவு நாள் ஆகுமா?!…

by சிவா |   ( Updated:2025-03-27 02:43:38  )
veera dheera sooran
X

#image_title

Veera dheera sooran: அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம்தான் வீர் தீர சூரன். இந்த படத்தை சிபு தமீன் எனும் தயாரிப்பாளர் தயாரித்திருந்தார். கடந்த சில வருடங்களாக விக்ரமுக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. எனவே, இந்த படம் ஹிட் அடிக்கும் என காத்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே படக்குழு புரமோஷனில் ஈடுபட்டு வந்தது. பல ஊடங்களுக்கும் சென்று விக்ரம், அருண், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் மற்றும் இப்படத்தில் கதாநாயாகியாக நடித்த துஷரா விஜயன் ஆகியோர் பேசினார்கள். மேலும், கேரளா, ஹைதராபாத், மதுரை என பல ஊர்களுக்கும் சென்று ரசிகர்களை சந்தித்து புராமோஷன் செய்தார்கள்.

வீர தீர சூரன் படம் இன்று காலை உலகமெங்கும் வெளியாகவிருந்தது. ஆனால், இப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய B4U என்கிற நிறுவனம் ‘நாங்கள் ஓடிடி உரிமை விற்கும் முன்பே தயாரிப்பாளர் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டார். இதனால், இந்த படத்தில் நாங்கள் போட்ட தொகையில் 50 சதவீத நஷ்டம். எனவே, எங்களுக்கு 7 கோடியை தயாரிப்பாளர் கொடுக்காமல் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது’.

#image_title

இந்த வழக்கில் நேற்று மாலையே தீர்ப்பும் அளிக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணிவரை படத்தை வெளியிடக்கூடாது என நீதிபதி தீர்ப்பளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த விக்ரம், அருண் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் தங்களின் சம்பளத்திலிருந்து பணம் கொடுத்து 7 கோடியை கொடுத்தார்கள். எனவே, இன்று மதியமாவது படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

இந்நிலையில், ஒப்பந்தத்தை மீறி ஓடிடி உரிமை விற்கும் முன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்ததாக சொல்லி வீர தீர பட ரிலீசுக்கு எதிராக IVY என்கிற நிறுவனமும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் வீர தீர சூரன் படத்தை 4 வாரங்களுக்கு வெளியிட தடை விதிக்கப்பட்டு உத்தரவு வெளியாகியுள்ளது. இது தயாரிப்பாளருக்கு அடுத்த சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும், இன்று மதியம் 3 மணிக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சனை தீர்க்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்படுகிறது.

ஓடிடி உரிமை சம்பளம் பாக்கிக்காக விக்ரமிடம் கொடுத்தார் தயாரிப்பாளர். ஒருபக்கம் B4U என்கிற நிறுவனத்திடம் கொடுத்திருக்கிறார். இந்த நிறுவனம் வழக்கு போட்டதும் ஓடிடி உரிமையை விக்ரம் திருப்பி கொடுத்துவிட்டார். இப்போது IVY என்கிற நிறுவனத்திடம் கொடுத்ததும் தெரிய வந்தது. மொத்தத்தில் ஓடிடி உரிமையை பலரிடம் கொடுத்து தயாரிப்பாளர் சொதப்பியதால்தான் வீர தீர சூரன் படம் இதுவரை ரிலீஸாகாமல் இருக்கிறது. எப்படிப்பார்த்தாலும் படம் இன்று வெளியாக வாய்ப்பில்லை என்கிறார்கள். அனேகமாக பிரச்சனை எல்லாம் பேசி தீர்க்கப்பட்டு நாளை காலை படம் வெளியாகும் என கணிக்கப்படுகிறது.

Next Story