Veera Theera Sooran: முதல் ஷோ கேன்சல்னாலே அவ்வளவுதான்.. வீரதீரசூரன் படம் பற்றி உருக்கமாக பேசிய விக்ரம்

by Rohini |   ( Updated:2025-04-04 01:51:23  )
veera
X

veera

Veera Theera Sooran: முதல் ஷோ கேன்சலானே அவ்வளவுதான்.. வீரதீரசூரன் படம் பற்றி உருக்கமாக பேசிய விக்ரம்வீரதீர சூரன் திரைப்படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. இதை பற்றி சமீபத்தில் விக்ரம் ஒரு வீடியோவை வெளியிட்டு உருக்கமாக பேசியிருக்கிறார். இதோ அவர் பேசியது: ஒரே ஒரு வாழ்க்கை வரலாறாக வாழ்ந்து விடு அப்படின்னு ஈஸியாக சொல்வார்கள். ஆனால் இந்த வாழ்க்கை இருக்கிறதே? ஏதாவது ஒரு பிரச்சனை. ஏதாவது ஒரு கல் நம்மை நோக்கி வீசப்பட்டு கொண்டே இருக்கும்.

இந்த மாதிரி நிறைய சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. உதாரணமாக வீர தீர சூரன் திரைப்படம், படம் ரிலீசுக்கு முன்பு நிறையபேர் பார்த்து இது ஒரு மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஆகப்போகிறது. என்ன இப்படி ஒரு படமாக இருக்கிறது? புதுசா இருக்கிறது. மாஸா இருக்கிறது. இந்த வருஷத்தோட மிகப்பெரிய ஒரு படமாக இது அமையப்போகிறது என்று சொல்லி எங்க எல்லாரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டு போய்விட்டார்கள்.

ஆனால் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். நிறைய பிரச்சனை. ஹைகோர்ட் நான்கு வாரத்திற்கு இந்த படத்தை ரிலீஸ் பண்ண கூடாது என கூறியது, கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. என்னை பொறுத்த வரைக்கும் இந்த படம் எப்படியாவது நம்முடைய ரசிகர்களை போய் சேர வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் இந்த படத்திற்குள் அவ்வளவு முயற்சிகளை நாங்கள் செய்திருக்கிறோம்.

உழைப்பை போட்டிருக்கிறோம். படத்தில் நடித்தவர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரின் உழைப்பும் இதில் இருக்கிறது. ரொம்ப நாளைக்கு பிறகு என்னுடைய ரசிகர்களுக்காக ஏதாவது பண்ண வேண்டும் என்று எண்ணி நடித்த படம். புதுசா ஏதாவது முயற்சி செய்யலாமே என முயற்சி செய்து எடுத்த படம். ஆனால் அது வராத பட்சத்தில் மிகவும் கஷ்டமாக இருந்தது.

sooran

அதனால் எல்லாம் யோசித்து ஏதாவது பண்ண வேண்டும். சினிமாவிற்கு நாம் எது வேண்டுமானாலும் பண்ண தயாராக இருக்கிறேன் என அனைவருக்கும் தெரியும். இதெல்லாம் ஒரு மேட்டரா என சொல்லி ஏதோ பண்ணி இந்த படம் வெளியே வந்தது. ஒரு படம் முதல் ஷோ கேன்சல் ஆனாலே அந்த படம் அவ்வளவுதான் .ஆனால் இந்த படம் ரெண்டு ஷோ கேன்சல் ஆகி மாலையில் தான் வெளியானது.

முதல் நாள் வரவேற்பு என்பது கண்டிப்பாக பாதிக்கப்பட்டது. ஆனால் தியேட்டருக்கு வந்து பார்த்த ஒவ்வொருத்தரும் இதற்கு முன்னாடி என்ன சொன்னார்களோ அதைவிட அழகாக சொன்னார்கள். குறிப்பாக குடும்பமாக வந்து இந்த படத்தை கொண்டாடினார்கள் .சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்த்தோம் ,ரொம்ப என்ஜாய் பண்ணோம், அப்படி சொல்லும் போது கேட்கவே சந்தோஷமாக இருந்தது. இப்போது ஒரு பெரிய வெற்றியை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும்.

இதை நினைத்து பார்க்கும் பொழுது எனக்கு நன்றி தான் ஞாபகத்திற்கு வருகிறது. அதனால் உங்கள் எல்லோருக்கும் நன்றி. இந்த படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்கள். பார்க்காதவர்கள் போய் படத்தை பாருங்கள் என்று அந்த வீடியோவில் விக்ரம் பேசியிருக்கிறார்.

Next Story