தயாரிப்பாளருடன் பஞ்சாயத்து!.. வீர தீர சூரன் ரிலீஸில் உள்ள சிக்கல்!..

#image_title
Veera dheera sooran : விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் வீர தீர சூரன். சேதுபதி, சித்தா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ள அருண் இப்படத்த இயக்கியுள்ளார். பொதுவாக ஒரு படத்தின் முதல் பாகம் வெளியான பின்னர்தான் இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால், விர தீர சூரனை பொறுத்தவரை முதலில் 2ம் பாகத்தை வெளியிடுகிறார்கள். இந்த படம் வெளியாகி 8 மாதங்கள் கழித்தே முதல் பாகத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளது.
மதுரையை பின்னணியாக கொண்ட ஒரு பக்கா கேங்ஸ்டர் கதையாக வீர தீர சூரன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷரா விஜயன் நடித்திருக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா மற்றும் சுராஜ், சித்திக் போன்ற மலையாள நடிகர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார். ஒரு இரவில் நடக்கும் பக்கா ஆக்சன் படமாக வீர தீர சூரன் உருவாகியிருக்கிறது.
கடந்த சில வருடங்களாகவே விக்ரமுக்கு சரியான வெற்றிப்படம் கிடைக்கவில்லை. ஆனால், வீர தீர சூரன் ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார். தற்போது படக்குழு ஊர் ஊராக சென்று புரமோஷன் செய்து வருகிறது. விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷரா விஜயன் மற்றும் சுராஜ் ஆகியோர் ஒன்றாக சென்று ரசிகர்களை சந்தித்து உரையாடி வருகிறார்கள்.

#image_title
அப்படி செல்லும் போது பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்து வருகிறது. மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் விக்ரமுக்கு துஷரா விஜயன் ஜாலியாக கவிதை சொல்லி ரொமான்ஸ் செய்த சம்பவமும் வீடியோவாக வெளியானது. படக்குழு ஜாலியாக இருந்தாலும் இப்படத்தின் ரிலீஸில் ஒரு சிக்கல் இருப்பது தெரியவந்திருக்கிறது.
மும்பையை சேர்ந்த B4U என்கிற தயாரிப்பு நிறுவனமும் இந்த படத்தில் பணமுதலீடு செய்திருக்கிறது. அதற்காக இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை தயாரிப்பாளர் அந்த நிறுவனத்த்திற்கு எழுதி கொடுத்துவிட்டாராம். ஓடிடி உரிமையை விற்ற பின்னரே தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என அக்ரிமெண்ட்டில் இருக்கிறது. ஆனால், ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படவில்லை. ஒருக்கம் படக்கூழுவோ ரிலீஸை நோக்கி நகர்ந்துவிட்டது.
எனவே, நீங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டதால் எங்களால் ஓடிடி உரிமையை விற்க முடியவில்லை. இதனால் நாங்கள் முதலீடு செய்த தொகையிலேயே 50 சதவீதம் நஷ்டம் என B4U நிறுவனம் சொல்ல, ‘அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்’ என தயாரிப்பாளர் சிபு தமீன் கையை விரிக்க இப்போது B4U நிறுவனம் நீதிமன்றத்தை நாட திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், ரிலீஸுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் இது எதில் போய் முடியும் என தெரியவில்லை. எப்படியும் வீர தீரன் சூரன் 27ம் தேதி வெளியாகி விடும் என்றே சொல்லப்படுகிறது.