வீர தீர சூரன் ரிலீஸ் தேதி குறிச்சாச்சி!.. தமிழ்நாட்டு உரிமை மட்டும் இவ்வளவு கோடியா?!…

Published on: November 28, 2024
veera dheera
---Advertisement---

Veera Dheera Sooran: சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சியான் விக்ரம், ஒருபக்கம் தில், தூள், சாமி போன்ற மசாலா படங்களிலும் ஒரு பக்கம் பிதாமகன், காசி அந்நியன், ஐ போன்ற நடிப்புக்கும், தோற்றத்திற்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடித்து வரும் நடிகர் இவர்.

கமலுக்கு பின் விதவிதமான கெட்டப்புகளில் நடிக்க ஆசைப்படும் நடிகர் இவர். ஐ படத்திற்காக விக்ரம் போட்ட உழைப்பு கோலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தியது. உடலின் எடையை பாதியாக குறைத்து சிரமப்பட்டு நடித்தார். ஆனாலும் இந்த படத்திற்கு விக்ரமுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: மஞ்சு வாரியர்னா இனிக்குது!.. உதவி இயக்குனருனா கசக்குதா!.. வெற்றிமாறனை கிழித்த அந்தணன்..!

ஆனாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் அசத்தலான நடிப்பை கொடுத்திருந்தார். இந்த படத்திற்காக கண்டிப்பாக தேசிய விருதை அவர் வாங்குவார் என்றே கணிக்கலாம்.

தற்போது வீர தீர சூரன் என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை அருண்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படம் விக்ரமின் 62வது திரைப்படமாகும். எஸ்.ஜே.சூர்யா, துஷரா விஜயன், சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

veera dheera sooran
veera dheera sooran

இந்த படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. புது மாதிரியாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் உள்ளிட்ட டைட்டில் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த படத்தை பொங்கலை முன்னிட்டு 2025ம் வருடம் ஜனவரி 10ம் தேதி வெளியிடலாம் என முடிவெடுத்துள்ளனர். இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை மினிமம் கேரண்டி அடிப்படையில் 21 கோடிக்கு ஃபைவ் ஸ்டார் செந்தில் வாங்கியிருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.