முதல் நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய ஒரே படம்.. ஆளுயர மாலையில் மூழ்கிய ‘வீர தீர சூரன்’

veeratheera sooran
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீரதீர சூரன். இந்த படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடமிருந்து பாசிட்டிவான விமர்சனத்தையே பெற்று வருகிறது. தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் கடுமையான உழைப்பை போட்டு நடிக்க கூடியவர் விக்ரம். இதுவரை அவர் நடித்த படங்களை எடுத்துக் கொண்டோமானால் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்திருப்பார் .
அதுவே ரசிகர்கள் இவரை விரும்புவதற்கு ஒரு காரணமாக அமைந்தது. விஜய் ,அஜித் ,சூர்யா என ஆளாளுக்கு ரசிகர் பட்டாளம் இருந்தாலும் விக்ரமுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. தன்னுடைய ரசிகர்களை அவர் பார்க்கும் பொழுது வெளிப்படுத்தும் சந்தோஷம் வேறு எந்த நடிகரும் இதுவரை வெளிப்படுத்தியது இல்லை. ஸ்டைலாக ரசிகர்களை பார்த்து கையசைப்பது ,கிஸ் அடிப்பது .
தன்னுடன் பிறந்த தம்பியை போல தன் நண்பரைப் போல மிகவும் யதார்த்தமாக பழகக் கூடியவர் விக்ரம். ஒவ்வொரு படத்திற்கும் இவர் மெனக்கிடும் விதம் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில்தான் இவர் நடித்து நேற்று வெளியான திரைப்படம் வீரதீர சூரன் .இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார் .
எஸ் ஜே சூர்யா, சுராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .படம் ரிலீஸ் ஆகும் வேளையில் சில பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கி நேற்று காலை வெளியாக வேண்டிய திரைப்படம் மாலை 6 மணிக்கு தான் வெளியானது. ஆனாலும் இதுவரை படம் பாசிட்டிவான விமர்சனத்தையே பெற்று வருகிறது. விக்ரமை ஒரு இயக்குனர் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அருண்குமார் நன்றாக செய்து காட்டி இருக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இனிமேலாவது விக்ரமை இந்த மாதிரி படங்களில் பயன்படுத்துங்கள் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தை பற்றி பாசிட்டிவ் ரிவ்யூஸ் வருவதால் தமிழ்நாடு திரையரங்கு விநியோகஸ்தர் 5 ஸ்டார் கே செந்தில் விக்ரமையும் படத்தின் இயக்குனர் அருண்குமாரையும் சந்தித்து அவர்களுடைய சந்தோஷத்தை பகிர்ந்து இருக்கின்றனர். பெரிய ஆளுயர மாலைகளை இரண்டு பேருக்கும் அணிவித்து இந்த சக்ஸை கொண்டாடியிருக்கின்றனர். அந்த புகைப்படம் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.