சியான் விக்ரமோட சம்பளம் கூட வரலயே!.. வீர தீர சூரன் வசூல் இவ்வளவுதானா?!…

#image_title
Veera Dheer Sooan: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் முக்கியமானவர் சியான் விக்ரம். சேது படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி தில், தூள், சாமி என வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். கடந்த 10 வருடங்களில் அவருக்கு பெரிய ஹிட் அமையவில்லை. இடையில் பொன்னியின் செல்வன் படம் மட்டும் ஓடியது. இந்நிலையில்தான் அவரின் ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும்படி வீர தீர சூரன் படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தை சேதுபதி, சித்தா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய அருண் இயக்கியுள்ளார். துவக்கம் முதலே இந்த படத்தின் போஸ்டர் மற்றும் புரமோ வீடியோக்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஒரு பக்கா ஆக்ஷன் கேங்ஸ்டர் படமாக இப்படம் உருவாகியிருப்பது டிரெய்லர் வீடியோவை பார்க்கும்போதே தெரிந்தது. எனவே, இந்த படத்தை பார்க்க விக்ரம் ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள்.
ஆனால், ஓடிடி உரிமை விவகாரத்தில் தயாரிப்பாளர் சொதப்பியதால் அறிவித்தபடி கடந்த 27ம் தேதி காலை வீர தீர சூரன் படம் வெளியாகவில்லை. ஒருவழியாக மாலை 5 மணிக்கு வெளியானது. 27ம் தேதி 2 காட்சிகள் மட்டுமே ஓடியது. எனவே, முதல் நாள் வசூல் பாதிக்கப்பட்டது. முதல்நாள் வெறும் 3.2 கோடி மட்டுமே வசூலானது.

2ம் நாள் 3.7 கோடி, 3ம் நாள் 5.5 கோடி, 4ம் நாளான நேற்று 6.65 கோடி என 4 நாட்களில் இப்படம் 19.05 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. மலையாளப் படமான எம்புரான் 2 நாளிலேயே 100 கோடி வசூலை தொட்ட நிலையில் வீர தீர சூரன் 4 நாட்களில் 20 கோடியை கூட தாண்டவில்லை.
இத்தனைக்கும் படம் பற்றி பாசிட்டிவான விமர்சனங்கள் வருகிறது. படம் பார்த்த பலரும் சமூகவலைத்தளங்களில் படம் சிறப்பாக இருப்பதாக பதிவிட்டு வருகிறார்கள். சியான் விக்ரம் ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். விக்ரம் இந்த படத்திற்கு பெரிய அளவில் புரமோஷனும் செய்தார். ஆனாலும் எதிர்பார்த்த வசூலை இப்படம் பெறவில்லை. இதில், விக்ரமின் சம்பளமே 40 கோடிக்கும் மேல் என்கிறார்கள்.
இன்று ரமலான் விடுமுறை என்பதால் இன்று இப்படம் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது. ஓடிடி, சேட்டிலைட் போன்ற உரிமைகளை விற்றாலும் படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்கும் என்கிறது திரையுலக வட்டாரம்.