சீயானின் வீர தீர சூரன்2… கம்பேக்னா இப்படி இருக்கணும்? டிரெய்லர் இதோ!

by Akhilan |   ( Updated:2025-03-20 11:17:50  )
சீயானின் வீர தீர சூரன்2… கம்பேக்னா இப்படி இருக்கணும்? டிரெய்லர் இதோ!
X

VeeraDheeraSooran

VeeraDheeraSooran: சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் வீர தீர சூரன் 2 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தன்னுடைய நடிப்பு மற்றும் கதை மட்டுமே நம்பி இறங்கும் முக்கிய நடிகர்களில் விக்ரமுக்கு முக்கிய இடம் உண்டு. அவர் ஒவ்வொரு படத்திற்கும் கொடுக்கும் உழைப்பே அந்த படத்தின் மீதான பிரமிப்பை கொடுத்து விடும். ஆனால் விக்ரமும் சில நேரம் ஆக்‌ஷன் படங்களில் ஆர்வம் காட்டுவார்.

அந்த படங்களும் அதிரடி ஹிட் கொடுத்து ஆச்சரியப்படுத்தும். அந்த வகையில் கடந்தாண்டு சூப்பர்ஹிட் படமான சித்தாவை இயக்கிய அருண் குமார் இப்படத்தினை இயக்கி இருக்கிறார். சீயான் விக்ரமுடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

VeeraDheeraSooran

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. மார்ச் 27ந் தேதி இப்படம் வெளியாக திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில் அன்று இப்படத்துடன் போட்டிக்கு மோகன்லாலில் எல்2 எம்புரான் ரிலீஸாக இருக்கிறது. இதனால் இரு படத்துக்குமே போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாக இருக்கும் நிலையில் முதல் பாகம் பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருப்பதும் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

Also Read: தனிக்காட்டு ராஜாவா வரும் கூலி!.. மொத்த தியேட்டரும் தலைவருக்குதான்!..

Next Story