வீர தீர சூரன் படத்துக்கு விக்ரம் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? வெவரம்தான்!

by Akhilan |   ( Updated:2025-03-29 04:59:25  )
வீர தீர சூரன் படத்துக்கு விக்ரம் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? வெவரம்தான்!
X

Veera Dheera Sooran

Veera Dheera Sooran: பிரபல நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படம் ரிலீஸாகி வெற்றி நடைப்போட்டு வரும் நிலையில், இப்படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை முதலாக வெளியிட திட்டமிட்டனர். அதுபோல திரைக்கதையை அமைத்து இருந்தனர். எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர்.

வெற்றிக்கரமாக படம் வெளியாகும் என ஒரு வாரமாக படக்குழு புரோமோஷனில் செம பிஸியாக இருந்தனர். ஆனால், படம் ரிலீஸ் ஆவதற்கு சரியாக ஒருநாளைக்கு முன்னர் பணப்பிரச்னை காரணமாக நீதிமன்றம் சென்று இடைக்கால தடை வாங்கியது.

Vikram

ஒருநாள் பெரிய போராட்டத்துக்கு பின்னர் படம் வெற்றிக்கரமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே சீயான் விக்ரமின் சமீபத்திய படங்களின் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. தங்கலான் படத்திற்கும் இதே போன்று பிரச்னை வந்தது.

மகான் படமும் ஒரளவு நல்ல கதையாக அமைந்தாலும் நேரடியாக ஓடிடி ரிலீஸுக்கு சென்றது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய கோப்ரா திரைப்படமும் ரசிகர்களிடமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இதனாலே சீயான் விக்ரமின் திரை வாழ்க்கை தொடர்ந்து சரிவை தான் சந்தித்து வருகிறது. இருந்தும், விக்ரமுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகளும் வந்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் வீர தீர சூரன் படத்துக்காக சீயான் விக்ரம் வாங்கிய சம்பளம் 30 கோடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தற்போது சினிமாவில் உயர்ந்து வரும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களே 30 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் நிலையில் சீயான் விக்ரம் சம்பளம் இன்னும் உயராமல் இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story