விக்ரமுக்கு நேரம் சரியில்லப்பா… வீர தீர சூரனுக்கு எதிராக கோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

by Akhilan |
விக்ரமுக்கு நேரம் சரியில்லப்பா… வீர தீர சூரனுக்கு எதிராக கோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
X

veera dheera sooran

VeeraDheeraSooran: விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் வீர தீர சூரன் திரைப்படத்தின் ரிலீஸ் நாளை குறிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென நீதிமன்ற தீர்ப்பு குறித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் வீர தீர சூரன். சீயான் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் நாளை மார்ச் 27ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து முதல் பாகம் வெளியாகும் என தகவல்கள் வெளியானது. மதுரையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இப்படம் கேங்ஸ்டர் கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

படம் நாளை வெளியாக இருந்த நிலையில் படக்குழு மும்முரமாக பிரமோஷன் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரம் இருக்கு தங்கலான் போன்று மீண்டும் சிக்கலை படம் எடுத்து வைத்திருக்கிறது.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த B4U என்கிற தயாரிப்பு நிறுவனமும் பணம் முதலீடு செய்து இருக்கிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அந்நிறுவனம் தற்போது தக்க வைத்திருக்கும் நிலையில் அதன் மூலம் தான் தற்போதைய சிக்கல் உருவாகி இருக்கிறது.

பொதுவாக ஒரு படத்தின் ஓடிடி உரிமை விற்கப்பட்ட பின்னரே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் இப்படத்தின் ரிலீஸை படக்குழு முன்கூட்டியே அறிவித்ததால் தங்களால் படத்தின் ஓடிடியை விற்க முடியவில்லை என B4U தயாரிப்பாளரிடம் கடுப்படித்து இருக்கிறது.

ஆனால் அவரோ இதை கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விட்டதால் தற்போது அந்த நிறுவனம் நீதிமன்ற படி ஏறி இருக்கிறது. தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மார்ச் 27 காலை 10.30 வரை வீரதீரசூரன் படத்தை வெளியிடக்கூடாது என இடைக்கால உத்தரவையும் பிறப்பித்து இருக்கிறது.

இப்படத்திற்கு ஏகப்பட்ட புக்கிங் டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் ரிலீஸ் தள்ளி போகுமா இல்லை முதல் காட்சியுடன் தடை நீக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story