வீர தீரன் சூரன் பட க்ளைமாக்ஸில் அந்த விண்டேஜ் சாங்.. வேற லெவலில் கலக்கிய விக்ரம்

veera
Veera Dheera Sooran Movie: அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் வீரதீர சூரன். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன் ,மலையாள நடிகர் சுராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார் .ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு முழு நீள ஆக்சன் கேங்ஸ்டர் திரைப்படம் ஆகவும் இந்த படம் உருவாகியுள்ளது .
இந்த படத்திற்காக ஒட்டுமொத்த பட குழுவும் தீவிரமான புரமோஷனில் கடந்த சில நாட்களாகவே ஈடுபட்டு வந்தனர். விக்ரம் ,துஷாரா விஜயன் ,எஸ் ஜே சூர்யா ,இயக்குனர் அருண்குமார் ஆகியோர் ஊர் ஊராக சென்று படத்தை பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து வந்தனர் .அது போக எல்லா சேனல்களிலும் பேட்டி கொடுத்தும் வந்தனர் .இந்த நிலையில் நேற்று காலை வெளியாக வேண்டிய இந்த படம் சில பைனான்ஸ் பிரச்சனையால் ரத்து செய்யப்பட்டது.
அதன் பிறகு நீதிமன்றம் வரை இந்த வழக்கு சென்று கடைசியில் நேற்று மாலை 6 மணி அளவில் படம் வெளியானது .படத்தை பார்த்து அனைவரும் மிரண்டு போய்விட்டனர். ஏற்கனவே சித்தா படத்தை இயக்கிய இயக்குனர் என்பதால் இந்த படத்தின் மீது ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை நிச்சயமாக பூர்த்தி செய்து இருக்கிறார் அருண்குமார் .
படத்தை பார்த்த பலரும் விக்ரமை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என இயக்குனர்களுக்கு தெரியவில்லை. ஆனால் அருண்குமார் விக்ரமை நல்ல முறையில் பயன்படுத்தி காட்டி இருக்கிறார். விக்ரமுக்கு ஆன படம் இதுதான் என படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமல்ல படத்தின் கிளைமேக்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் அமைந்திருப்பதாகவும் அந்த கிளைமாக்ஸில் ஒரு பழைய பாடல் ஒலிப்பதாகவும் அது வேற லெவலில் இருக்கிறது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இனிமேலாவது விக்ரமை சரியான முறையில் இயக்குனர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் ரசிகர்கள் ஒரு வேண்டுகோளாகவே வைத்திருக்கின்றனர். இந்த படம் விக்ரம் கேரியரில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக அமையும் என்றும் படத்தை பார்த்த அனைவரும் கூறி வருகின்றனர்.