வாழ்வா சாவா போராட்டத்தில் ‘வீரம்’ பட நடிகர்!.. கன்ணீரை வரவழைத்த நெகிழ்ச்சி பதிவு!..
அஜித் சிறுத்தை சிவா கூட்டணில் வெளியான படங்களில் பெரிய ஹைப்பை ஏற்படுத்திய படமாக ‘வீரம்’ படம் அமைந்தது. அந்தப் படம் அண்ணனுக்கும் தம்பிகளுக்கும் இடையே உள்ள பாசத்தையும் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும்
அடிப்படையாக அமைந்த படமாக விளங்கியது.
அஜித் அண்ணனாக தம்பிகளாக விதார்த், பாலா மற்றும் பல நடிகர்களும் நடித்திருப்பர். சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அஜித்திற்கு ஜோடியாக தமன்னா இந்தப் படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தம்பி கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகரான பாலா ஏற்கெனவே தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அண்ணாத்த போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
அதிலும் அன்பு படத்தில் அமைந்த ‘தவமின்றி கிடைத்த வரமே’ என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடலாக அமைந்தது. இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி பாலா கல்லீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் வாந்தி, வயிற்று வலியும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார்.
கடந்த ஒரு மாதமான மருத்துவமனையிலேயே சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் பாலா. இந்த நிலையில் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி முதல் மனைவியை விவாகரத்து செய்து கடந்த 2021 ஆம் ஆண்டு தான் இரண்டாவதாக மருத்துவர் எலிசபெத் உதயம் என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று பாலா தன்னுடைய இரண்டாவது திருமண நாளை தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது பேசிய பாலா இன்னும் ஒரு சில மாதங்களில் அவருக்கு ஒரு மேஜர் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாம். அறுவை சிகிச்சை செய்தாலும் உயிர் பிழைக்க வழி இருக்குமா? என்பது சந்தேகம் தானாம்.
இருந்தாலும் எதிர்மறையாக யோசிக்காமல் இறைவனை பிரார்த்திருக்கிறேன், நீங்களும் எனக்காக ஆண்டவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என கண்கலங்க வைத்துவிட்டார். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க : படப்பிடிப்பில் யாரையும் சந்திக்க விரும்பாத கமல்!.. திடீர் விசிட் அடித்த ராமராஜன்.. என்னாயிருக்கும்?..
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CqZ75MmoWLV/?utm_source=ig_web_copy_link
Courtesy to daily thanthi