Connect with us

7 வருடம் கழித்து விஜய்க்கு சரியான பதிலடி கொடுத்த அஜித்… தோல்வியை ஒப்புக்கொள்ளாத தளபதி.?

Cinema History

7 வருடம் கழித்து விஜய்க்கு சரியான பதிலடி கொடுத்த அஜித்… தோல்வியை ஒப்புக்கொள்ளாத தளபதி.?

தமிழ் சினிமாவின் இரு துருவாரங்களாக இருக்கும் அஜித் விஜய் திரைப்படங்கள் எப்போது ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவருடன் காத்திருந்த காலம் எல்லாம் உண்டு. அப்படி சில சமயம் நடந்தும் உள்ளது. அதேபோல் வரும் பொங்கல் தினம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஒரு சிறிய பிளாஷ்பேக் நிகழ்வை நாம் இப்போது பார்க்கலாம். அதாவது 2007 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு. அஜித் நடித்திருந்த ஆழ்வார் திரைப்படம் விஜய் நடித்த போக்கிரி திரைப்படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது.

இதன் ரிசல்ட்டை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அஜித்தின் ஆழ்வார் திரைப்படம் படுதோல்வி. அந்த பக்கம் தளபதி விஜயின் போக்கிரி இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய வெற்றியை விஜய்க்கு கொடுத்து இருந்தது.

இதையும் படியுங்களேன் – நாங்கெல்லாம் அப்போவே ஆஸ்கர் லெவல் நாயகன்டா… இந்திய சினிமாவை மிரள வைத்த ஆண்டவர் சம்பவங்கள்…

அதற்கு அடுத்ததாக 2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வீரம் திரைப்படம் விஜய் நடிப்பில் ஜில்லா திரைப்படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இதில் முதலில் ஜில்லா படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. குறைவான  திரையரங்குகளில் வீரம் திரைப்படத்திற்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதையும் படியுங்களேன் –  அஜித்திற்கு மேடையிலேயே வாழ்த்து கூறிய விஜய்.! நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணியில் எஸ்.ஏ.சி.!

அப்படி இருந்தும் நாட்கள் மெல்ல மெல்ல நகர நகர வீரம் திரைப்படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டன. அதன் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டன. அதே போல் வசூலிலும் வீரம் திரைப்படம் ஜில்லா திரைப்படத்தை முந்தியது என்று பலரும் கூறுகிறார்கள். ஜில்லா திரைப்படமும் நன்றாக ஓடிக் கொண்டிருந்தது.

அப்படி இருந்து சமயத்தில் தான் விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் விநியோகிஸ்தர்களை அழைத்து ஜில்லா படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது எனக் குறிப்பிட்டு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அதில் விஜய் படக்குழுவினர் மற்றும் விநியோக செயல்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top