Categories: latest news trailers

சேலையை உருவி வேலையை ஆரம்பித்த விஷால்!..வெளியான வீடியோ….

விஷால் நடிப்பில் புதுமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தை விஷாலே அவரது விஷால் பிலிம் ப்ரொடெக்சன் மூலம் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.

ஆனால், பல காரணங்களால் பட ரிலீஸ் தள்ளி போய் கடைசியாக ஜனவரி 26 என அறிவிக்கப்பட்டது. பொங்கல் ரிலீஸில் இருந்த பெரிய திரைப்படம் தள்ளிப்போனதால் பொங்கலுக்கு களமிறங்க திட்டமிடப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் அப்போதும் ரிலீஸ் ஆக வில்லை. தற்போது எந்த தேதியில் ரிலீஸ் ஆகும் என படக்குழுவுக்கே தெரியவில்லை. அந்தளவுக்கு கொரோனா திரைப்படதுறையினரை பயமுறுத்தி வருகிறது.

இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் கமர்சியல் திரைப்படமாக உருவாகியுள்ளதை காட்டுகிறது. இடையில் காதல், ரொமான்ஸ் என காட்டப்படுகிறது. அதில் தான் ஹீரோயின் சேலையை உருவி விஷால் ஆரம்பிக்கலாமா என கேட்டு அடுத்த சீனுக்கு டூயட் பாடலுக்கு ரெடியாகிறார் போல. படத்தின் ட்ரைலர் ரசிகர்களை கவரும் படி அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பட ரிலீசும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Published by
Manikandan