வேல ராமமூர்த்தியின் ஒருநாள் சீரியல் சம்பளம் இவ்வளவா? அட என்னப்பா இது?

Vela Ramamoorthy: எழுத்தாளர் மற்றும் சினிமா நடிகரான வேல ராமமூர்த்தி சீரியலில் நடிக்க தொடங்கும் போது அவர் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டார். அந்த அளவுக்கு அவருக்கு ஒரு நாளுக்கு சீரியலில் சம்பளம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ராணுவத்தில் சில வருடங்கள் பணிபுரிந்து விட்டு தபால் துறையில் வேலை செய்து வந்தார் எழுத்தாளர் வேலராமமூர்த்தி. அப்போது இருந்தே அவருக்கு எழுத்தின் மீது அதிக ஆர்வம் இருந்தது. குற்றப்பரம்பரை, பட்டத்து யானை உள்ளிட்ட நாவல்களை எழுதி புகழ்பெற்றார். இதை தொடர்ந்து அவர் மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் நடிகராகவும் என்ட்ரி கொடுத்தார்.
இதையும் படிங்க: தனுஷூக்கு வில்லன் S.K. இவருக்கு வில்லன் யாரா இருக்கும்? பிரபலம் போடும் ரூட் இதுதான்..!
தொடர்ச்சியாக கிராமத்து கதைகளில் நடித்து வந்தார் வேலராமமூர்த்தி. அந்த நேரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வேடத்தில் நடித்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். கிட்டத்தட்ட பெண்களிடம் அவர் நடிப்பால் பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருந்த மாரிமுத்தின் திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இதனால் குணசேகரன் வேடத்தில் யார் நடிப்பார்கள்? எதிர்நீச்சல் கதை என்னவாகும் என பலரிடத்திலும் பெரிய அளவு எதிர்பார்ப்பு நிலவியது. அவர் கேரக்டரை எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி செய்ய இருப்பதாக முதலில் தகவல்கள் பரவியது. குணசேகரன் ஆக மாரிமுத்து நடித்த அதே அளவு நடிப்பை வேல ராமமூர்த்தியும் கொடுப்பார் என பலர் எதிர்பார்த்து இருந்தனர்.
இதையும் படிங்க: நான் ஐஷுவை காதலிக்கிறேனா? அடுத்த வீட்டு கதை நமக்கு எதுக்கு… கறாராக பேசிய பிக்பாஸ் நிரூப்…
ஆனால் முதலில் விருப்பம் இல்லாமல் நடிக்க தொடங்கிய வேலராமமூர்த்தி தற்போது சீரியல் தேர்வு சரி என்ற மனநிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஏனெனில் அவருக்கு சினிமாவில் கிடைக்கும் சம்பளத்தை விட சீரியலில் அதிகமாக கிடைக்கிறதாம். ஒரு நாளைக்கு எதிர்நீச்சல் சீரியலில் அவருக்கு 40 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.