எதிர்நீச்சல் நடிகர் பேத்தியின் திருமணம்!. அடேங்கப்பா இம்புட்டா!. உடம்பு முழுக்க தங்கம்தான்!

by ramya suresh |
எதிர்நீச்சல் நடிகர் பேத்தியின் திருமணம்!. அடேங்கப்பா இம்புட்டா!. உடம்பு முழுக்க தங்கம்தான்!
X

#image_title

எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தியின் பேத்தி திருமணம் திருநெல்வேலியை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

பிரபல எழுத்தாளராக இருந்து பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் வேல ராமமூர்த்தி. இவர் அடிப்படையில் ஒரு ராணுவ வீரர். அவர் ஆரம்பத்தில் குற்றப்பரம்பரை, பட்டத்து யானை உள்ளிட்ட பல நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதி இருக்கின்றார். 2013 ஆம் ஆண்டு வெளியான மதயானை கூட்டம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.

இதையும் படிங்க: தலக்கணம் ஏறிப் போய் அலையும் நயன்தாரா! திடீரென ஏன் இவருக்கு இவ்வளவு கோபம்?

இந்த திரைப்படத்திற்குப் பிறகு சினிமாவில் பிஸியான நடிகராக மாறிவிட்டார். அந்த வகையில் கொம்பன், பாயும் புலி, சேதுபதி, கிடாரி, தொண்டன், அறம், மெஹந்தி சர்க்கஸ், நம்ம வீட்டு பிள்ளை, அண்ணாத்த, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றார்.

அதனை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்கின்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். சினிமாவில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பாகவே அவர் எழுதிய நாவல்கள் மூலமாக பிரபலமானவர் தான் வேல ராமமூர்த்தி. இவர் இயக்கிய குற்றபரம்பரை என்கின்ற நாவலை வைத்து இயக்குனர் பாலா படமாக எடுப்பதற்கு முயற்சி செய்தார்.

marriage

marriage

இந்நிலையில் தற்போது திருநெல்வேலி முழுவதும் வேல ராமமூர்த்தி பேத்தி வைஷ்ணவி தேவியின் திருமணம் தான் மிகப்பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. தொழில் அதிபர் ஆர் எஸ் முருகன் என்பவரின் மகன் விஜய் ராகுலை வைஷ்ணவி திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். மணமக்கள் இருவரும் முழுக்க முழுக்க தங்கத்தாலான மாலையை அணிந்திருந்தார்கள்.

அது மட்டும் இல்லாமல் மணப்பெண் வைஷ்ணவி முழுவதும் தங்கத்தாலே அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். அவர் அணிந்திருந்த நகை மட்டுமே சுமார் 600 சவரன் இருக்கும் என்று கூறப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் வைஷ்ணவி அணிந்திருந்த புடவை 8 லட்சம் ரூபாய் என்றும், அவரது பிளவுஸ் 3 லட்சம் என்றும் கூறப்படுகின்றது.

இதையும் படிங்க: கங்குவா தோல்வியால் மாமனாரின் பேச்சையே மீறிய ஜோதிகா… வைரலாகும் வீடியோ!..

இந்த பிரம்மாண்டமான திருமணத்தை பார்த்து திருநெல்வேலி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமும் தமிழ் சினிமாவும் வாயைப் பிளந்து இருக்கின்றது. மேலும் இந்த திருமணத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள். மேலும் இந்த திருமணத்தில் பின்னணி பாடகர் எஸ் பி சரண், சைந்தவி, சூப்பர் சிங்கர் பாடகர்கள் கலந்து கொண்டு இனிமையான பாடல்களை பாடியிருந்தார்கள்.

இன்று திருமணத்தின் கேட்டரிங் பொறுப்பு மாதம்பட்டி ரங்கராஜன் அவர்கள் செய்திருந்தார்கள். அரசியல் தலைவர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தான் தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

Next Story