ஆதி குணசேகரனா நானா? இவர் சொல்றத பார்த்தா நமக்கு நெஞ்சுவலி வந்துரும் போல! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா?

Actor Vela Ramamoorthy: சமீபத்தில் மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமும் இன்னும் அந்த பேரதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அவர் குடும்பத்தாரையும் தாண்டி அவர் நடித்த எதிர்நீச்சல் சீரியலுக்கு விழுந்த மிகப்பெரிய அடிதான் இது. ஆதி குணசேகரனாக வீட்டில் உள்ள அனைவரையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த இவரின் அடக்கு முறையால் ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களும் இவர் மேல் கடுப்பில் இருந்தனர்.

அந்தளவுக்கு இந்தக் கதாபாத்திரத்தை மிகவும் தத்ரூபமாக கொண்டு போயிருந்தார் மாரிமுத்து. இதுவரை இல்லாத ஒரு வரவேற்பு இந்த எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்திருந்தது என்றால் அதற்கு முக்கிய காரணம் மாரிமுத்துதான்.

இதையும் படிங்க: தேசிய விருது படத்தினை ரிலீஸ் செய்ய திட்டமா? விஜயை காலி செய்ய களமிறங்கும் மல்டி ஹீரோக்கள்!

பெண்களை எப்பொழுதும் அடக்கிதான் ஆளவேண்டும் என்ற ஒரு கொடூரமான கதாபாத்திரமாக சீரியல் முழுவதும் வலம் வந்தார். இன்னும் ஒரு படி மேலாக ஏய்..இந்தாம்மா என்ற வார்த்தை இவர் மூலமாக உலகெங்கிலும் உள்ள சன் டிவி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

இந்த நிலையில் அந்த சீரியலில் ஆதி குணசேகரனாக மாரிமுத்துவுக்கு பதிலாக யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்தது. ரசிகர்களும் இவர் நடித்தால் நன்றாக இருக்கும் அவர் வந்தால் நன்றாக இருக்கும் என அவரவர் விருப்பங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதையும் படிங்க: ஃபேன்டா பாட்டில் நடிகை ஆண் நண்பர்களுடன் ஜல்ஷா!.. ஆடிப்போன கோலிவுட்.. என்ன சிம்ரன் இதெல்லாம்!..

இந்த நிலையில் பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி இனிமேல் ஆதி குணசேகரனாக நடிக்க போகிறார் என்ற ஒரு செய்தி திடீரென வைரலானது. அதுவரை ரசிகர்கள் யார் யார் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் இவரின் பெயரைக் கேட்டது இவரை விட சரியான ஒரு நபர் இந்த கேரக்டரில் நடிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தனர்.

மேலும் வேல ராமமூர்த்தியின் பெயர் வைரலானதில் இருந்து சரியான தேர்வு என ஒட்டுமொத்த ஆதரவையும் மக்கள் கொடுக்க தொடங்கிவிட்டனர். ஏனெனில் வேல ராமமூர்த்தியிடமும் அந்த மண் மனம் கமலும் கிராம வாசனை நிறைந்திருக்கும். தான் பேசும் வசனமும் மிகவும் எதார்த்தமாக இருக்கும்.

இதையும் படிங்க: ஷூட்டிங்கில் ரவிச்சந்திரன் செய்த அட்ராசிட்டி! பொறுத்துக் கொள்ள முடியாமல் பொங்கி எழுந்த ஜெயலலிதா

மேலும் அந்த திமிரும் அவர் நடிக்கும் நடிப்பிலேயே வெளிப்படும். ஆனால் இதை பற்றி வேல ராமமூர்த்தியிடம் கேட்கும் போது அப்படியா என்று நம்மிடமே கேள்வியை திருப்பினார். ஆனால் இந்த சேனலில் இருந்து தன்னிடம் நடிக்க வரும் படி கேட்டார்கள் என்றும் தான் இப்போது படங்களில் மிகவும் பிஸியாக இருக்கிறேன் என்றும் கூறினாராம்.

அதுமட்டுமில்லாமல் அவர் வீட்டுக்கு சென்றே 20 நாள்கள் ஆகிவிட்டதாம். அந்தளவுக்கு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறாராம் வேல ராமமூர்த்தி. ஆனால் அவருடைய நண்பர்கள் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் சொல்லி என்னை நடிக்கச் சொல்கிறார்கள் என்றும் இன்னும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும் மாரிமுத்துவின் இடம் ஒரு பெரிய இடம். இருந்தாலும் முயற்சி பண்ணிப் பார்ப்போம் என்றும் கூறினார்.

 

Related Articles

Next Story