More
Categories: Cinema News latest news

கோட் படம் சந்தித்த சவால்கள்… வெற்றியை கொடுக்குமா?.. பீஸ்ட் மாதிரி ஆயிடக்கூடாதுப்பா!..

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் கோட். இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே பல சவால்கள் வந்த வண்ணம் உள்ளன என்கிறார் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி. வேற என்னவெல்லாம் சொல்றாருன்னு பாருங்க…

கோட் (G.O.A.T)னு பேரு அறிவிச்சதுமே அப்படின்னா ஆடு தானேன்னு பலரும் சொன்னாங்க. ஏற்கனவே ஆடுங்கற பேருல அரசியல்வாதி இருக்காரு. அதுக்கு அப்புறமா பாடல்கள். சேம்பைனா திறக்கட்டுமான்னு பார் பாடல். இது பெரிய கொடுமையா இருந்துச்சு. அதுக்கு அப்புறம் ரெண்டு பாடல்கள். அதுவும் மனசுல நிக்கல. அதுக்குக் காரணம் விஜயின் தலையீடு. பாடல்கள்ல யுவன் சங்கர் ராஜாவே தெரிய மாட்டாரு. நடுவுல அரசியல் பயணம்.

Advertising
Advertising

Also read: தேர்தலுக்குப் பிறகு விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருக்கா? அதுதான் அவரோட பிளானா?

அப்புறம் டீஏஜிங். இதுல விஜயைக் காட்டுறப்ப அவர் நேபாளியா, ஜப்பானியரான்னு சந்தேகம் வந்துடுச்சு. இப்போ கொஞ்சம் மாற்றியிருக்காங்கன்னு தகவல் வந்துடுச்சு. இதுக்கு இடையில டிரைலரையும் மாற்றி இருக்காங்க. அது கொஞ்சம் பரவாயில்லை. அப்புறம் பாடல் வெளியீட்டுல பிரச்சனை. பாடலே சரியில்ல. விட்டுருவோம்னு இருந்துட்டாங்க. இது ஒரு நீண்ட தூர பயணமா இந்தப் படம் போய்க்கிட்டே இருந்தது. படம் எப்ப வரும்னு ஒரு கேள்வி இருந்துக்கிட்டே இருந்தது. படத்தை விட்டாலும் சரி. விடலன்னாலும் சரின்னு ஒரு சலிப்பு மக்களுக்கு வந்துட்டு.

சென்சாருலயும் அந்த சிக்கல் வந்தது. ஏ யா யுஏயான்னு. அதையும் சரி பண்ணிட்டாங்க. படம் 3 மணி நேரம் ஓடுதுன்னா ரசிகர்கள் தாங்குவாங்களா? அவங்க தாங்கித்தான் ஆகணும். ஆனா வெகுஜன ரசிகர்கள் தாங்குவாங்களான்னு பார்க்கணும். 30 செகண்ட்ஸ் ஷாட்ஸே பார்க்க மாட்டேங்குறான். அடுத்துப் பார்க்கப் போயிடறான். அப்படின்னா 3 மணி நேரம் இருப்பானா?

இப்போ டிஜிட்டலைஸ்டு வந்ததுக்குப் பிறகு எடிட்டருக்கு நிறைய வேலை வந்துடுது. ஆனா விஜய் படத்துக்கு இது பெரிய பிரச்சனையா இருக்காது. இவ்வளவு சவாலையும் சந்திக்க வேண்டியிருக்கு. இந்தப் படம் எல்லா சவால்களையும் தாண்டி மக்கள் மத்தியில் போய் சென்றடையணும்.

Also read: டோன்ட் டச் மி!.. கையை பிடித்த கமெடி நடிகரிடம் கோபப்பட்ட தல!.. இப்படிப்பட்டவரா அஜித்!..

பீஸ்ட் படம் மாதிரி ஆகிவிடக்கூடாது. அப்படி அமையாத பட்சத்தில் மறுபடியும் சினிமாவில் ஸ்டேன்ட் பண்ணிட்டு அரசியலுக்குப் போகலாம் என்ற எண்ணத்தைக்கூட விதைக்கலாம். ரஜினி அரசியலுக்கு வருவேன் வருவேன்னு சொல்லிட்டு வராம போனாரு. ஆனா இந்தப் படம் ரிலீஸாக இருக்கு. படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Published by
sankaran v