250 கோடியா? ‘மூக்குத்தி அம்மன் 2’வைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகமா?

by Rohini |   ( Updated:2025-04-15 05:51:53  )
nayan
X

nayan

Mookuthi Amman 2: மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் தயாராகி வருகின்றது. முதல் பாகத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி அதில் நடிக்கவும் செய்திருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தை சுந்தர் சிதான் இயக்குகிறார். மேலும் இந்தப் படத்தில் ரெஜினா , மீனா, குஷ்பூ என பலரும் நடிக்க போவதாக ஒரு தகவல் அடிபட்டு வருகிறது. முதல் பாகத்தில் நயன் மட்டுமே நடித்து கெத்து காட்டினார்.

ஆனால் இரண்டாம் பாகத்தில் 90களில் கலக்கிய டாப் நடிகைகளும் சேர்ந்து நடிப்பதால் என்ன மாதிரியான கதையாக மாறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. அதுவும் 110 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகப் போகிறது. இடையில் மிகவும் மந்தமான நிலையில் இருந்த வேல்ஸ் நிறுவனம் இப்போதுதான் சரியான பாதையை தேர்ந்தெடுத்து படம் தயாரித்து வருகிறது.

வேல்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரைக்கும் ஒரு நடிகருடன் மூன்று படங்களுக்கான கால்ஷீட்டை வாங்கி விடுவார்கள். அந்த வகையில் தனுஷை வைத்தும் ஒரு படத்தை தயாரிக்க போவதாக செய்திகள் வெளியானது. இடையில் அது சம்பந்தமான ஒரு வீடியோவும் வெளியானது. மாரி செல்வராஜ் தனுஷ் கூட்டணியில் ஒரு படம் உருவாக போவதாக ஒரு போஸ்டரை வெளியிட்டது.

தனுஷின் படத்தையும் 110 கோடி பட்ஜெட்டில்தான் தயாரிக்க போகிறார்களாம். இதற்கு மத்தியில் கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க போகிறார்கள். இதன் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்ததை ஒட்டி அதன் இரண்டாம் பாகத்தையும் அதே கூட்டணியில்தான் தயாரிக்க இருக்கிறார்களாம். விஷ்ணுவிஷால் ஐஸ்வர்யா லட்சுமி லீடு ரோலில் நடிக்க அவர்களுக்கு இடையே இருந்த கெமிஸ்ட்ரி படத்திற்கு பிளஸாக அமைந்தது.

மீண்டும் அவர்கள் தான் அதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் 35 கோடி பட்ஜெட்டில் உருவாக போவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆக மொத்தம் இந்த வருடம் மட்டும் வேல்ஸ் நிறுவனம் 250 கோடி முதலீட்டில் படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story