சர்ச்சையைக் கிளப்பிய வேலுபிரபாகரன் படங்கள் - ஓர் பார்வை

by sankaran v |   ( Updated:2022-02-18 03:23:20  )
velu
X

தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர் வேலுபிரபாகரன். இவர் பல புரட்சிகரமான படங்களை இயக்கியுள்ளார்.

1989ல் வெளியான நாளைய மனிதன் படத்தை முதலில் இயக்கி தமிழ்;த்திரையுலகில் காலடி எடுத்து வைத்தார், வேலுபிரபாகரன். தொடர்ந்து நாளைய மனிதன் படத்தின் 2ம் பாகமாக 1990ல் அதிசயமனிதன் என்ற படத்தை இயக்கினார். இரண்டுமே பயங்கரமான திகில் படங்கள். அந்தக்கால கட்டத்தில் இந்த படங்களைக் கொஞ்சம் தைரியமானவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை இருந்தது.

இவரது மாறுபட்ட படங்களில் ஒருசிலவற்றை இப்போது பார்க்கலாம்.

கடவுள்

kadavul movie

இயக்குனர் வேலுபிரபாகரன் 1997ல் இயக்கிய விமர்சனத்திற்குரிய படம் கடவுள். வேலுபிரபாகரன் நாத்திகராக நடித்துள்ளார். இவரை பக்தர்கள் ஒரு கட்டத்தில் தாக்குகின்றனர். இதனால் அவர் கோபம் அடைகிறார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் சுமார். ஆதிசிவன், எனக்கு ஒரு, கோவிலுக்குள்ளே இருக்கும்;;;;;;;;;;;;;;;;;;, அறிவிருந்தா, காதலை, பூவரசன் பூவே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

சிவன்

1999 ல் வேலு பிரபாகரன் இயக்கிய படம் சிவன். அருண்பாண்டியன், துரைசாமி, ராதிகா, சுவாதி, அகானா உள்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை வேலுபிரபாகரன் செய்துள்ளார். ஆதித்யன் இசை அமைத்த படம். எகிப்து நாட்டு கிளியோபாட்ரா, ஓ என் பெண்மை, பெசரட் பெசரட், ருக்குத்தான் ருக்குத்தான், உதிரை கில்லி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

புரட்சிக்காரன்

2000ல் வெளியான இப்படத்தின் இயக்குனர் வேலுபிரபாகரன். சத்யராஜ், ரோஜா, குஷ்பூ, மன்சூர் அலிகான், நீனா, ராதாரவி, மணிவண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். தாழ்ந்த, மண்ணுக்கு நம்மதான், ஒற்றை பார்வையிலே, கடவுள் இல்லடா, தூங்கும் புலி ஆகிய பாடல்கள் உள்ளன.

காதல் அரங்கம்

kathal kathai

வேலுபிரபாகரனின் காதல் கதை என்ற பெயரில் வெளியானது. படத்தில் நிர்வாணக்காட்சிகள் வருகிறது. இளையராஜா இசை அமைத்துள்ளார். மலரே மலரே, கடுகுலே நடக்கிறதே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளும் பெரும் சர்ச்சையைக் கிளப்பின.

ஒரு இயக்குனரின் காதல் டைரி

வேலுபிரபாகரன் நடித்து இயக்கியுள்ளார். உடன் பொன்ஸ்வாதி, சந்துரு ரகுநாத், ஜெகா, சுரேஷ், ரம்யா, அகில் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.

iyakunarin kathal diary

காதலையும், காமத்தையும் பற்றி பாடம் நடத்துகிறார் இயக்குனர். குறிப்பாக பள்ளிகளில் செக்ஸ் விழிப்புணர்வு கல்வி அவசியம் என வலியுறுத்துகிறார். இளையராஜாவின் பாடல்கள் அருமை.

கடவுள் 2

kadavul 2

இயக்குனர் வேலுபிரபாகரன் எடுத்த கடவுள் படத்தின் தொடர்ச்சியாக கடவுள் 2 படத்தை தற்போது இயக்கி வருகிறார். கடவுள் தற்போது அவதாரம் எடுத்தால் யாராக வருவார் என்று ஒரு கேள்விக்கு தனக்கே உரிய பாணியில் இந்தப்படத்தில் பதில் சொல்கிறார் இயக்குனர்.

அதன்படி கடவுள் இயக்குனர் அவதாரமே எடுத்தால் என்ன செய்வார் என்றும் சுவாரசியம் குறையாமல் படத்தை எடுத்துள்ளதாக கூறுகிறார். உடன் ஆர்.ஆர்.தமிழ் செல்வன், சுவாதி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ளனர். கெஸ்ட் ரோலில் சத்யராஜ், சீமான், சீதா உள்பட பலர் நடிக்கின்றனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.

Next Story