அடி மட்டத்துக்குப்போன சிம்பு பட வசூல்!...சக்சஸ் மீட் எல்லாம் நடத்துனீங்களே புரோ!....
மாநாடு மெகா ஹிட் படத்திற்கு பின் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்திற்காக சிம்பு தனது உடலை மெலிதாக்கி மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்து.
இப்படம் கடந்த 15ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக படத்தின் நீளம் ரசிகர்களை சோதித்ததாகவும், வழக்கமான டான் கதையையே கவுதம் மேனன் எடுத்துள்ளார் எனவும் ரசிகர்கள் பலரும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முதலில் தனுஷ்…இப்ப சிம்பு…அடுத்த டார்கெட் யார்?!…கவுதம் மேனனை கலாய்க்கும் புளூசட்டமாறன்…
ஒருபக்கம் யுடியூப் விமர்சகர்களும் படத்தை கிண்டலடித்தனர். இதில், புளூசட்டைமாறனும் ஒருவர். புளூசட்டைமாறனின் விமர்சனம் கவுதம் மேனனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது போல. எனவே, சினிமா விழாக்களில் கலந்து கொண்டு பேசும் போது மறைமுகமாக அவரை தாக்கியே பேசி வருகிறார். இருவருக்கும் ஒருபக்கம் வார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.
ஒருபக்கம், வெந்து தணிந்தது காடு படத்தின் வசூல் வெகுவாக குறைந்துவிட்டது. முதல் நாள் 6.85 கோடி வசூலில் துவங்கிய இப்படம் அடுத்த நாள் 3.72 கோடி, 3ம் நாள் 5.27 கோடி, 4ம் நாள் 5.41 கோடி, 5ம் நாள் ரூ.1.03 கோடி என இதுவரை இப்படம் தமிழகத்தில் ரூ.22.28 கோடியை மட்டுமே வசூல் செய்துள்ளது.
படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிட்டால் தயாரிப்பாளருக்கு நஷ்டமே மிஞ்சும் எனவும் பலரும் கூறி வருகின்றனர். அதேநேரம், உலகம் முழுவதும் 4 நாட்களில் இப்படம் ரூ.50 கோடியை வசூல் செய்துள்ளதாக சிம்பு ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எப்படி ஆயினும், இன்னும் சில நாட்களில் வெந்து தணிந்தது காடு படத்தின் உண்மையான வசூல் நிலவரம் தெரிந்துவிடும்.
நிலைமை இப்படி இருக்க, படம் வெளியான அடுத்த நாளே படத்தின் சக்சஸ் மீட் விழாவில் கவுதம் மேனனும், சிம்புவும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.