ஒவ்வொரு மொழியிலயும் ஒருத்தர தூக்காம 90’ஸ் நடிகர்கள் ஏன்?!. வெங்கட்பிரபு போட்ட ஸ்கெட்ச்!..

by சிவா |
goat
X

#image_title

Goat: சமீபகாலமாகவே பெரிய நடிகர்களின் படங்கள் பேன் இண்டியா படங்களாக மாறிவிட்டது. முதலில் ஹாலிவுட் படங்களில் தமிழில் டப் செய்ய்ப்பட்டு வந்தது. அதன்பின் இந்திய மொழியில் உருவாகும் படங்களே பல மொழிகளிலும் உருவாவது அதிகரித்துவிட்டது. அதற்கு காரணம் வியாபார நோக்கம் மட்டுமே.

இந்த ஆசையை பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தூண்டியதே ராஜமவுலிதான். அவரின் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியாகி வசூலில் சக்கை போட்டு போட்டது. அதைத்தொடர்ந்து புஷ்பா, கேஜிஎப், காந்தாரா, ஆர்.ஆர்.ஆர், கேஜிப் 2, ஜெயிலர் போன்ற படங்களும் பல மொழிகளில் வெளியாகி வசூலை பெற்றது.

இதையும் படிங்க: இமானை மிரட்டினார் சிவகார்த்திகேயன்!. அதனால்தான் சொன்னோம்!.. வலைப்பேச்சு பகீர்!…

எனவே, எல்லா நடிகர்களுக்கும் அந்த ஆசை வந்துவிட்டது. எல்லா மொழியிலும் ஓட வேண்டும் என்பதற்காக ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என எல்லா மொழியில் இருந்து ஒரு நடிகரை நடிக்க வைப்பார்கள். ரஜினியின் ஜெயிலர் படத்திலும், விஜயின் லியோ படத்திலும் கூட அப்படித்தான் பல நடிகர்கள் நடித்தார்கள்.

ரஜினி இப்போது நடித்து வரும் வேட்டையன் படத்திலும் அமிதாப்பச்சன், தெலுங்கு நடிகர் ராணா, மலையாள நடிகர் பஹத்பாசில் என பலரும் நடித்திருக்கிறார்கள். இதுதான் வியாபார யுக்தியும் கூட. ஆனால், வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கோட் படத்தில் அப்படி யாருமே இல்லை.

mohan

#image_title

மாறாக 80 காலகட்டத்தில் ஹீரோவாக கலக்கிய மோகன், 90ல் ஹீரோவாக நடித்த பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகியோரை நடிக்க வைத்திருந்தார் வெங்கட்பிரபு. எல்லா மொழியில் இருந்தும் ஒருத்தர தூக்கி எல்லோரும் படமெடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் வெங்கட்பிரபு அதை செய்யாமல் ஏன் இப்படி செய்கிறார்? இது படத்திற்கு எப்படி உதவும்? விபி ரிஸ்க் எடுக்கிறார்? என்றே பலரும் நினைத்தார்கள்.

ஆனால், மற்ற மாநில நடிகர்களை போட்டிருந்தால் கூட செயற்கையாக இருந்திருக்கும். ஆனால், இதுதான் நன்றாக இருக்கிறது. மோகன், பிரசாந்த் போன்ற பழைய நடிகர்களை திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கும் சாந்தோஷமாக இருந்தது. அதோட, அவர்களுக்கும் கோட் படம் ஒரு கம்பேக்காக அமைந்துவிட்டது. அந்தவகையில் வெங்கட்பிரபுவை நிச்சயம் பாராட்டலாம்.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டாருடன் இணைந்த ரியல் ஸ்டார் கதை தெரியுமா? படா மாஸா இருக்கே!

Next Story