அஜித், விஜய் பரவாயில்லை.. ஆனா சூர்யாவை சமாளிக்கிறது கஷ்டமப்பா… இயக்குனருக்கே அல்லுவிட்ருச்சாம்!..

by Akhilan |
அஜித், விஜய் பரவாயில்லை.. ஆனா சூர்யாவை சமாளிக்கிறது கஷ்டமப்பா… இயக்குனருக்கே அல்லுவிட்ருச்சாம்!..
X

#image_title

Surya: கதையை முடிவு செய்ய வைப்பதில் அஜித் மற்றும் விஜய்யை சமாதானம் செய்து விடலாம் என்றும். ஆனால் சூர்யா அந்த விஷயத்தில் ரொம்பவே கண்டிப்பானவர் எனவும் இயக்குனர் வெங்கட் பிரபு பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

சென்னை 28 படத்தில் இருந்து வித்தியாசமான திரைக்கதையில் ரசிகர்களை வந்து வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் மற்றும் சூர்யா என அனைவருடனும் பணியாற்றி இருக்கிறார். அஜித்தின் 50-வது திரைப்படமான மங்காத்தாவை இயக்கியது வெங்கட் பிரபு தான். ஆண்டி ஹீரோவாக அஜித் படத்தில் மாஸ்காட்டி இருப்பார்.

இதையும் படிங்க: தொலஞ்சி போன ஹார்ட் டிஸ்க் கிடைச்சிடுச்சி போல!.. ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்!..

பல வருடங்களுக்கு பிறகு அஜித்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக மங்காத்தா அமைந்தது. கிட்டத்தட்ட அஜித்தின் இரண்டாவது இன்னிங்ஸ் என்றே கூறலாம். அதைத்தொடர்ந்து சூர்யாவை வைத்து மாஸ் என்கிற திரைப்படத்தை இயக்கினார். அத்திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் நல்ல வரவேற்பை பெற்றது.

venkat prabhu

வித்தியாசமான திரைக்கதையில் படம் ரசிகர்களிடம் அப்ளாஸ் பெற்றது. இந்நிலையில், விஜயை வைத்து கோட் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏகப்பட்ட சர்ப்ரைஸ் விஷயங்களை வைத்திருக்கும் வெங்கட் பிரபுவின் இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேடங்களில் நடிக்கிறார்.

இதையும் படிங்க: வாழை படத்தில் பெத்த கோடியை சம்பாரித்த மாரி செல்வராஜ்… இதெல்லாம் நடந்து இருக்கா?

இந்நிலையில் கோட் பட புரோமோஷனில் கலந்து கொண்ட இயக்குனர் வெங்கட் பிரபு, படத்தின் ஒன்லைனை சரியாக சொல்லினாலே அஜித் மற்றும் விஜயை கவர்ந்து விடலாம். ஆனால் நடிகர் சூர்யா அதற்கெல்லாம் அசர மாட்டார். அவருக்கு முழு கதையை தான் சொல்ல வேண்டும்.

கதையில் ரொம்பவே கவனமாக இருப்பார். அவருக்காக நிறைய கதை சொல்லிய பின்னரே ஒன்றை தேர்வு செய்வார். ஆனால் ஒன்றை ஓகே செய்து விட்டால் யோசிக்காமல் அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வார். இயக்குனருக்கு தேவைப்படுவதை திரையில் கொண்டு வருவது சூர்யா எப்பையுமே திறமைசாலி தான் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story