More
Read more!
Categories: Cinema News latest news

டேய்!.. கோட் அப்டேட் விடுறா!.. அசிங்கமாக திட்டிய விஜய் ரசிகர்!.. வெங்கட்பிரபு என்ன சொல்றார் பாருங்க!..

Venkat Prabhu: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படத்தின் அப்டேட் கேட்க ரசிகர்கள் தொடங்கி விட்ட நிலையில் ரசிகர் ஒருவர் விவகாரமான போஸ்ட்டை போட அதில் இயக்குனர் வெங்கட் பிரபு கடுப்பாகி இருக்கிறார்.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி கோட் திரைப்படத்தினை தயாரிக்கிறார். இப்படத்தில் விஜயுடன் மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர். இப்படத்தில் மைக் மோகன் வில்லன் அவதாரம் எடுத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: மஞ்சுமல் பாய்ஸ் இருக்கட்டும்… குணாவே காப்பிதான்!.. கமல் எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!.

சயின்ஸ் பிக்‌ஷன் கதையான மாநாடு படத்தின் ஹிட்டை தொடர்ந்து கோட் திரைப்படத்தினையும் அதே ஜானரில் வெங்கட் பிரபு எடுக்க இருக்கிறார். இத்திரைப்படத்தில் அப்பா மற்றும் மகன் என விஜய் இருவேடங்களில் நடித்து வருகிறார். இது வில் ஸ்மித் நடிப்பில் வெளியான ஜெமினி மேன் படத்தின் கதை என்றும் ஒரு தகவல் உலா வருகிறது.

இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாடலுக்கான ஷீட்டிங் சென்னையில் வரும் வாரங்களில் நடக்க இருக்கிறதாம்.

இதையும் படிங்க:  தனுஷ் நடிக்கும் படத்தில் கமல், ரஜினி, சிம்பு? இதெல்லாம் வெறும் கனவா இல்லை நனவா?..

இந்நிலையில் ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் முதல் சிங்கிள் எப்போ எனக் கேட்ட போது ரொம்பவே சீக்கிரம் என வெங்கட் பிரபு கூறி இருப்பார். அதனை ஷேர் செய்த ரசிகர் ஒருவர் சீக்கிரம் சொல்லி ஒரு வாரம் ஆச்சு. சீக்கிரம் அப்டேட் கொடு என அசிங்கமான வார்த்தையும் போட்டு இருப்பார்.

இதில் கடுப்பான வெங்கட் பிரபு, அப்டேட் கொடுக்கலாம் தான் நினைச்சேன். ‘இதுக்கு மேல எப்படி கொடுக்கிறதுனு நீங்களே சொல்லுங்க’ என ட்வீட் செய்து இருக்கிறார். இதனால் குறிப்பிட அந்த ரசிகர் மீது ரசிகர்களே தற்போது கடுப்பில் கத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts

  • Entertainment News
  • latest news
  • television

பிக்பாஸ் அர்ச்சனாவின் காதலர் இவர்தானா?… புகைப்படம் உள்ளே!

பிக்பாஸ் டைட்டிலை…

6 hours ago