Categories: Cinema News latest news

அதுக்கெல்லாம் நோ… 24 மணி நேரமும் பிஸியாக இருக்கும் வெங்கட் பிரபு.. அப்டி என்ன சேதி?

இயக்குனர் வெங்கட் பிரபு எப்போதுமே ஜாலியாக இயக்கும் பழக்கம் கொண்டவர். ஆனால் அவர் கூட தன்னுடைய சேட்டையெல்லாம் மூட்டைக்கட்டி விட்டு ஒரு வேலையில் செம பிஸியாக சுற்றிக்கொண்டு இருக்கிறாராம். அப்படி என்னதான் அது எனத் தெரிந்து கொள்ள நம்பதகுந்த வட்டாரத்தில் விசாரிக்கும் போது வெளி வந்த தகவல்கள் ரொம்பவே ஆச்சரியத்தினை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் தன்னுடைய 68வது படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் விஜயின் ஜோடியாக பிரியங்காவையும் படக்குழு புக் செய்து இருக்கிறது. அதாவது இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒரு விஜயிற்கு ஜோதிகாவும், இன்னோரு விஜயிற்கு ப்ரியங்காவும் ஜோடியாக இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: ரகுவரனின் நிறைவேறாத கடைசி ஆசை.. அதனால தான் அப்படி ஆனார்… கண்கலங்கிய ரகுவரனின் தாயார்..

தன்னுடைய வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொண்டு படத்தினை செம ஹிட்டாக மாற்றினார். ஆனால் அதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவு மிகப்பெரிய வெற்றியினை பெறவில்லை. இருந்தாலும் விஜய் இந்த வாய்ப்பை வெங்கட் பிரபுவினை நம்பி கொடுத்து இருக்கிறார். ரொம்ப நாளுக்கு பிறகு விஜயின் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.

இதையும் படிங்க- ரகுவரன் லைஃப்ல மிஸ் பண்ணது! தனுஷ் மூலமாக நிறைவேற்றி ஆறுதலடைந்த சம்பவம்

விஜயின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வெங்கட் பிரபு திரைக்கதை எழுதுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறாராம். தன்னுடைய சொந்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு இதேவேளையில்  இருக்கிறாராம். அதிலும் குடிப்பழக்கம் இருக்கும் வெங்கட் பிரபு அப்படி கூட எதையுமே செய்யாமல் தொடர்ந்து ஸ்கிரிப்ட் எழுதும் பணியிலே இருக்கிறாராம்.

நவம்பர் மாத முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஏ.ஜி.எஸ் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது. இந்த வார இறுதியில் படக்குழு லண்டன் புறப்பட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

 

Published by
Akhilan